Skip to main content

Posts

Showing posts with the label உபுண்டு

உபுண்டுவில் ஓபன் DNS அமைத்தல்

DNS(Domain Name System) என்றால் என்ன ? ip முகவரிகள் மூலம் தான் நெட்வர்க்கில் உள்ள கணினிகள் மற்றதை தேடி அதனை தொடர்பு  கொள்கின்றன . ஆனால் நம்மால் பல ip முகவரிகளை நினைவில் வைத்துக்கொள்வது கடினம் . உதரணாமாக dns இல்லை என்றால் நீங்கள் கூகிலை அடைய ஒவ்வொரு முறையும் 74.125.135.105 என்ற ip கொடுக்க வேண்டும் . dns இந்த வேலையை சுலபமாக்குகிறது . ஒவ்வொரு முறையும் இந்த ip முகவரிஐ கொடுப்பதற்கு பதில் அதன் domain name ஐ கொடுத்தால் dns அதற்கு இணையான ip யை கண்டுபிடித்து அதனுடன் இணைக்கிறது . rDNS(reverseDNS) ip ஐ டொமைன் name ஆக மாற்றித்தருகிறது . எதற்காக openDNS? நம் ISP தரும் dns ஐதான் பெரும்பாலும் பயன்படுத்துவோம் . நமது விருப்பத்திற்கு ஏற்ப இதனை மாற்றிக்கொள்ள முடியும் . ஓபன் dns என்பது இலவசமாக கிடைக்கும் ஒரு சேவை . இது நமது ஐ எஸ்பி தரும் dns விட பல விதங்களில் நமக்கு பயன் அளிக்கும் . உதாரணமாக ஐ எஸ் பி dns விட வேகமாக தளங்களை இணைக்கும் , தவறாக

SKYPE 4.0 லினக்ஸிற்கான பதிப்பு

SKYPE 4.0 லினக்ஸிற்கான பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன் கோட் நேம் "Four Rooms for Improvement". இதில் சில சிறப்பு அம்சங்களும் சில மேம்படுத்தல்களும் செய்யப்பட்டுள்ளன. Skype 4.0ல் ஏற்படுத்தியுள்ள சில முக்கிய மாற்றங்கள்: தனித்த அறட்டை சாளரம்.

இலவச லேப்டாப்

ஒரு மாதத்திற்கு முன்பாக சொல்வேண்டிய ஒரு விஷயம். சிறிது காரணத்தால் தாமதமாகிவிட்டது. தமிழ்நாட்டில் பல மாணவர்களுக்கு இலவச லேப்டாப் கிடைத்திருக்கலாம். அதில் நானும் ஒருவன். கல்லூரியில் படிக்கும் எங்களுக்கும் கிடைத்தது மிக்க மகிழ்ச்சி. எங்களுக்கு கிடைத்தது லெனேவோ மாடல். 2 gb ram, pentium dual-core processor, 320 harddisk கொண்ட மடிக்கணினி. இதில் டிஸ்க் டிரைவ், web-cam, wi-fi போன்ற அதிக முக்கியத்துவமில்லாத எதுவுமில்லை.

VLCன் புதிய பதிப்பு VLC 2.0 உபுண்டுவில் நிறுவ

VLC தனது புதிய பதிப்பான VLC 2.0 வை சில நாட்களுக்கு முன் வெளியிட்டார்கள். vlcன் புதிய வசதிகள். multi-threaded decoding new audio and video filters Blu-ray support improved MKV demuxer Broadcom CrystalHD hardware decoding minor changes in interface உபுண்டு 12.04 உபயோகிப்பவர்கள் நேரடியாக software centerல் இருந்து நிருவிக்கொள்ளலாம். உபுண்டு 11.10 உபயோகிப்பவர்கள் vlc 2.0 ஐ நிறுவ: டெர்மினைலை திறந்து கொண்டு கீழே உள்ளதை காபி செய்து போடவும்.   $ sudo add-apt-repository ppa:n-muench/vlc $ sudo apt-get update $ sudo apt-get install vlc   உபுண்டு 10.10 உபயோகிப்பவர்கள்:   $ sudo add-apt-repository ppa:lucid-bleed/ppa $ sudo apt-get update  $ sudo apt-get install vlc vlc-plugin-pulse mozilla-plugin-vlc  

சில உபயோகமான குனூ/லினக்ஸ் டெர்மினல் கட்டளைகள்

எனக்கு தெரிந்த சில கமாண்ட்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.  நம்முடைய எந்த குனூ/லினக்ஸ் ஆனாலும் இந்த கட்டளைகளை முயன்று பார்க்கலாம். நம்முடைய கணினியை shutdown செய்வதற்கு: $sudo poweroff $sudo halt $sudo init 0 $sudo shutdown -h now

இணைய சுரண்டல் (web scrapping) ரூபி ஸ்கிரிப்ட்டில்

நேற்று சென்ணை பல்கலைகழக தேர்வு முடிவுகள் வெளியானது. ஒவ்வொரு resultஐயும் தனித்தனியாக பார்க்க ரொம்ப நேரமாகும். எல்லாருடைய resultஐயும் ஒரே பக்கத்தில் பார்க்க இந்த script உதவியது. என் நண்பர் ராஜ்குமார் அண்ணா பல்கலைகழக தேர்வு முடிவுகளை எடுக்க இந்த scriptஐ எழுதினார். நான் இதை சிறிது மாற்றியுள்ளேன் (சென்னை பல்கலைக்கழகத்திற்காக). இதைக்கொண்டு html மற்றும் txt fileஆக output எடுக்க முடியும். அதற்கு முன் hpricot மற்றும் open-uri என்ற இரு gemகள் தேவை $sudo gem install hpricot open-uri கொடுத்து நிறுவிகொள்ளவும் # Fetch my class students exam result from University site # Progamme name scrabing_exam_results.rb # Author : Rajkumar.S # moded by: Manimaran G # version : 0.01 # License: GNU GPL 3 require 'rubygems' require 'open-uri' require 'hpricot' url = "http://schools9.com/mad0702.aspx?htno=" # exam_no is a range exam_no = "s900488".."s900517" exam_no.each do |each_number| doc=Hpricot(open(url+each_number)) data=doc.search('table...

கட்டற்ற மென்பொருள் பற்றிய இலவச இதழ் கணியம்-02

இன்று கணியம் இதழின் இரண்டாவது இதழ் வெளியிடப்பட்டுள்ளது. சென்ற முறையை விட  மிகவும் நன்றாக உள்ளது. புது புது விஷயங்கள். முக்கியமாக ரிச்சர்டு ஸ்டால்மனின் சென்னை வருகை அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. சென்ற முறையை விட பல புது நண்பர்கள் கட்டுரைகளை எழுதி பங்களித்துள்ளனர் என்பது மிகவும் மகிழ்ச்சியான செய்தி.

உபுண்டுவில் மென்பொருட்களை வேகமாக நிறுவ நிரல்

உபுண்டுவில் மென்பொருட்களை நிறுவ வேண்டும் என்றால் நாம் software center சென்று நிறுவுவோம். அப்பொது அதன் தரவிறங்கும் நேரம் சற்று அதிகமாகும். டெர்மினலில் apt-get மூலம் மென்பொருட்களை நிறுவினால் அது wget மூலம் பேக்கேஜ்களை தரவிறக்கி நம்முடைய கணினியில் நிறுவும். இதற்கு பதிலாக axel, prozilla, aria2c போன்ற download acceleratorகளை பயன்படுத்தி தரவிறக்கினோம் என்றால் இன்னும் சற்று அதிகமான வேகத்தில் தரவிறக்க முடியும். இந்த download acceleratorகள் parallel download எனும் முறையை பயன்படுத்து ஒரே fileஇனை பல்வேறு பகுதிகளாக பிரித்து தரவிறக்கி பிறகு சேர்க்கும் எனவே இவை சாதாரண டவுண்லோட் மேனேஜரை காட்டிலும் வேகமாக இருக்கும். இந்த script நம்முடைய apt-get

சென்னை வருகிறார் ஒபன் சோர்ஸின் தந்தை Richard M Stallman

INTERNATIONAL  SEMINAR BY DR. RICHARD STALLMAN இலவச மென்பொருள் எனும் கருத்து 1980ம் ஆண்டு கணினி ஆராய்ச்சியாளரான ரிச்சர்டு எம். ஸ்டால்மென் என்பவரால் தொடங்கப்பட்ட குனூ எனும் திட்டத்தின் விளைவாகும். குனூ என்பது மற்ற வணிகம் சார்ந்த மென்பொருட்களுக்கு ஒரு மாற்றாக இருந்தது. குனு என்பது "GNU is Not Unix" என்பதின் விரிவுச்சொல்லாகும். இது ஒரு முற்றிலும் இலவசமான இயங்கு தளத்தை உருவாக்குவதற்காக தோன்றிய ஒரு யோசனை. இங்கு இலவசம் எனும் வார்த்தை கவணிக்கத்தக்கது. இலவசம் எனும் சொல் மொன்பொருளின் விலையை குறிப்பது அல்ல. இலவசம் எனும் சொல் அதையும் தாண்டி அதன் சுதந்த்திரத்தன்மையை குறிக்கிறது. அதன் சுதந்திரத்தன்மை பின்வரும் பாங்கில் பொருந்துகிறது. 1. பயனர் மென்பொருளை எந்த உபயோகத்திற்கும் பயன்படுத்தும் சுதந்திரம்.

உபுண்டு டெர்மினலில் இருந்து இலவசமாக sms அனுப்பலாம்

இன்று டெர்மினலில் இருந்து எப்படி இலவசமாக sms அனுப்புவது என்று பார்க்கலாம். way2sms சென்று sms அனுப்புவதற்கு அந்த தளத்தின் விளம்பரங்களை தாண்டிதான் அனுப்ப வேண்டியிருக்கிறது. விளம்பரங்களை பார்க்கமால் சுலபமாக இந்த script ஐ பயன்படுத்தி இலவசமாக sms அனுப்பலாம். இதற்கு முதலில் way2sms ன் பயனராக இருக்க வேண்டும். இல்லை என்றால way2sms.com சென்று ஒரு அக்கவுண்டினை தொடங்கிகொள்ளவும். username, password  வேண்டும்.

கட்டற்றமென்பொருள் பற்றிய மாத மின்இதழ்

உலகெங்கிலும் உள்ள தமிழ் மக்களுக்கு கணினிதொழில்நுட்பத்தை பற்றி அறிமுகம் செய்யும் கணியம் என்ற புதிய மாத மின்னிதழை வெளியிடுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். கணினி கற்க ஆங்கிலம் தடையாக இருந்த காலம் மாறி தொழில்னுட்பங்கள் யாவும் தமிழில் பெருகும் இந்த காலத்தில் மென்பொருள் பற்றிய நுட்பங்களை தமிழில் வழங்குவதில் பெருமை கொள்கிறோம். இந்த இதழின் கட்டுரைகள் : கட்டற்ற மென்பொருள் லினக்ஸ் பயனர் குழு – ஓர் அறிமுகம் உபுண்டு நிறுவுதல்

உபுண்டு பயனாளர் தினம் ஜனவரி14-15

உபுண்டு பயனாளர் தினம் என்பது உபுண்டுவின் புதிய பயனாளிகளுக்கோ அல்லது  நடுத்தரமான பயனாளிகளுக்கோ ஒரு நாளில் சில வகுப்புகள் அமைத்து அவர்களுக்கு உபுண்டு பற்றிய அடிப்படை மற்றும் உபுண்டுவுடன் எவ்வாறு தொடங்குவது பற்றி கற்றுத்தறும் ஒரு நிகழ்ச்சி. இது ஒரு தொடர்ச்சியான இணைய வழி சந்திப்பு.(IRC chat) இதில் நீங்கள் உபுண்டுவை எவ்வாறு நிறுவுவது. விண்டோஸிற்கு இணையான உபுண்டு மென்பொருட்கள்