DNS(Domain
Name System) என்றால்
என்ன?
ipமுகவரிகள்
மூலம் தான் நெட்வர்க்கில்
உள்ள கணினிகள் மற்றதை தேடி
அதனை தொடர்பு
கொள்கின்றன.
ஆனால் நம்மால்
பல ipமுகவரிகளை
நினைவில் வைத்துக்கொள்வது
கடினம்.
உதரணாமாக dns
இல்லை என்றால்
நீங்கள் கூகிலை அடைய ஒவ்வொரு
முறையும் 74.125.135.105
என்ற ip
கொடுக்க
வேண்டும்.
dns இந்த வேலையை
சுலபமாக்குகிறது.
ஒவ்வொரு முறையும்
இந்த ip முகவரிஐ
கொடுப்பதற்கு பதில் அதன்
domain nameஐ
கொடுத்தால் dns
அதற்கு இணையான
ipயை
கண்டுபிடித்து அதனுடன்
இணைக்கிறது.
rDNS(reverseDNS)
ipஐ டொமைன்
nameஆக
மாற்றித்தருகிறது.
எதற்காக
openDNS?
நம் ISP
தரும் dns
ஐதான் பெரும்பாலும்
பயன்படுத்துவோம்.
நமது விருப்பத்திற்கு
ஏற்ப இதனை மாற்றிக்கொள்ள
முடியும்.
ஓபன்dns
என்பது இலவசமாக
கிடைக்கும் ஒரு சேவை.
இது நமது
ஐ எஸ்பி தரும் dnsவிட
பல விதங்களில் நமக்கு பயன்
அளிக்கும்.
உதாரணமாக
ஐ எஸ் பி dnsவிட
வேகமாக தளங்களை இணைக்கும்,
தவறாக
அடிக்கும்(typos)
தளங்களை
திருத்தும்,
தேவையற்ற
அபாயகரமான தளங்களை(phishing,
adult sites) தடுக்கும்,
இதைனை
அமைப்பதற்கு எந்த மென்பொருளும்
நாம் தரவிறக்க தேவையில்லை.
இதை அமைப்பது
மிக சுலபம்.
உபுண்டுவில்
இதனை அமைப்பதற்கு
network-manager
சென்று அதில்
உள்ள edit
connection என்பதை
கொடுக்கவும்.
அதனை தேர்வு
செய்து பிறகு எடிட் என்பதை
அழுத்தவும்.
அதில் வரும்
மூன்றாவது டேபினை அழுத்தவும்.
methodல் உள்ள
Automatic(DHCP) address
only தேர்வு
செய்யவும்.
பிறகு DNS
servers: 208.67.220.220, 208.67.222.222 என்பதை
தரவும்.
அவ்வளவு தான்.
இது சரியாக
வேலை செய்கிறதா என்று காண
welcome.opendns.com
செல்லவும்.
இதற்கு
பதில் 8.8.8.8,
8.8.4.4 என்ற கூகுளின்
பப்ளிக் dns
ஐயும் தரலாம்.
ஆனால் ஒபன்dns
தரும் செவைகளை
விட குறைவுதான்.
how ti install ubuntu in windows
ReplyDeleteeasy way
Delete1. download ubuntu iso
2. extract using winrar or 7zip
3. run wubi.exe
reboot and you can see ubuntu in boot menu