Skip to main content

Posts

Showing posts with the label games

இலவச சதுரங்க விளையாட்டு

கல்லூரியில் போட்டிகள் நடைபெறப்போவதால் செஸ்ஸில் சேரலாமே என்று பேர் கொடுத்தேன். வீட்டில் செஸ் ப்ராக்டிஸ் செய்வதற்காக உபுண்டுவில் தேடினேன். விண்டோஸிற்கு பல செஸ் கேம்கள் கிடைத்தாலும் அது ஷேர்-வேர்களாகவே இருந்த்தன. எனவே உபுண்டு சாஃப்ட்வேர் சென்டரில் செஸ் விளையாட்டை தேடினேன். பல கேம்கள் வந்து குவிந்த்தன. அதில் pychess என்பதை  நிறுவிக்கொண்டேன். இதன் அளவு மிகவும் கம்மிதான். இரண்டு mbக்கு குறைவுதான். ஆனால் மிகவும் அருமையாக உள்ளது. ஆன்லைனில் மற்றவர்கள் கூடவும் விளையாடலாம். அதற்கான தனி சர்வரும் உண்டு.   இதனை உபுண்டுவில் நிறுவ சாஃப்ட்வேர் சென்டரில் pychess என்பதனை தேடி நிறுவவும். இல்லை எனில் டெர்மினலில் $ sudo apt-get install pychess என்று அடியுங்கள். உங்கள் கணினியில் நிறுவப்பட்டுவிடும்.

கன்சோல் கேம்களை நமது கணினியில் விளையாட

கேமிங்கன்சோல்கள் என்பவை கேம்கள் விளையாடுவதற்காக உருவாக்கப்பட்ட கருவிகள். இதனால் உருவாக்கப்படும் ஆடியோ, மற்றும் வீடியோக்கள் டிவி அல்லது அது போன்ற வெளியீட்டு சாதனங்களுடன் இணைக்கப்பட்டிருக்கும். இது நம்மில் பெரும்பாலோருக்கு தெரிந்திருக்கும் விஷயம். உதாரணமாக சோனியின் playstation மற்றும் மைக்ரோசாப்டின் xbox-360 ஆகியவற்றை கூறலாம். இது மட்டும் அல்லாமல் ஏராளமான் கேமிங் கன்சோல்கள் உள்ளன. இந்த கன்சோல் அவற்றிற்கென் தனியாக உருவாக்கப்பட்ட சிடி/டிவிடிகளை மட்டுமே செயல்படுத்தும். உதாரணமாக நீங்கள் playstation கன்சோலிர்கான டிவிடியினை வாங்க வேண்டும் என்றால் அது அந்த கன்சோலினாள் படிக்கப்படக்கூடிய உருமாட்டில் இருக்கவேண்டும்.