கல்லூரியில் போட்டிகள் நடைபெறப்போவதால் செஸ்ஸில் சேரலாமே என்று பேர் கொடுத்தேன். வீட்டில் செஸ் ப்ராக்டிஸ் செய்வதற்காக உபுண்டுவில் தேடினேன். விண்டோஸிற்கு பல செஸ் கேம்கள் கிடைத்தாலும் அது ஷேர்-வேர்களாகவே இருந்த்தன. எனவே உபுண்டு சாஃப்ட்வேர் சென்டரில் செஸ் விளையாட்டை தேடினேன். பல கேம்கள் வந்து குவிந்த்தன. அதில் pychess என்பதை நிறுவிக்கொண்டேன். இதன் அளவு மிகவும் கம்மிதான். இரண்டு mbக்கு குறைவுதான். ஆனால் மிகவும் அருமையாக உள்ளது. ஆன்லைனில் மற்றவர்கள் கூடவும் விளையாடலாம். அதற்கான தனி சர்வரும் உண்டு.
இதனை உபுண்டுவில் நிறுவ சாஃப்ட்வேர் சென்டரில் pychess என்பதனை தேடி நிறுவவும். இல்லை எனில் டெர்மினலில்
$ sudo apt-get install pychessஎன்று அடியுங்கள். உங்கள் கணினியில் நிறுவப்பட்டுவிடும்.
Comments
Post a Comment