Skip to main content

Posts

Showing posts with the label free

Zorin os விண்டோஸ் போன்ற லினக்ஸ்

முதலில் விண்டோஸினை பயன்படுத்திவிட்ட பலரும் லினக்ஸை முயற்சி செய்ய கூட  தயங்குவர். லினக்ஸினை பயன்படுத்துவது மிகவும் கடினம், அது விண்டோஸை விட வித்தியாசமாக இருக்கும் எனும் எண்ணம் அவர்களை தடுத்துவிடும். நீங்கள் கஷ்டமே படாமல் லினக்ஸினை விண்டோஸ் போன்று பயன்படுத்த ஒரு அருமையான லினக்ஸ் வழங்கல் உள்ளது. அதுதான் zorin-os. இது ubuntuவினை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டது. உபுண்டுவை போல் அல்லாமல் unityக்கு பதிலாக Zorin Desktop எனும்  பனிச்சூழலை (desktop-

இலவச சதுரங்க விளையாட்டு

கல்லூரியில் போட்டிகள் நடைபெறப்போவதால் செஸ்ஸில் சேரலாமே என்று பேர் கொடுத்தேன். வீட்டில் செஸ் ப்ராக்டிஸ் செய்வதற்காக உபுண்டுவில் தேடினேன். விண்டோஸிற்கு பல செஸ் கேம்கள் கிடைத்தாலும் அது ஷேர்-வேர்களாகவே இருந்த்தன. எனவே உபுண்டு சாஃப்ட்வேர் சென்டரில் செஸ் விளையாட்டை தேடினேன். பல கேம்கள் வந்து குவிந்த்தன. அதில் pychess என்பதை  நிறுவிக்கொண்டேன். இதன் அளவு மிகவும் கம்மிதான். இரண்டு mbக்கு குறைவுதான். ஆனால் மிகவும் அருமையாக உள்ளது. ஆன்லைனில் மற்றவர்கள் கூடவும் விளையாடலாம். அதற்கான தனி சர்வரும் உண்டு.   இதனை உபுண்டுவில் நிறுவ சாஃப்ட்வேர் சென்டரில் pychess என்பதனை தேடி நிறுவவும். இல்லை எனில் டெர்மினலில் $ sudo apt-get install pychess என்று அடியுங்கள். உங்கள் கணினியில் நிறுவப்பட்டுவிடும்.

தமிழா சொல்திருத்தி - நெருப்பு-நரி ஆட்ஆன்

இச்சொல்திருத்தி, பலரது தொண்டூழிய உழைப்பின் வெளிப்பாடு ஆகும். இது தன் பயணத்தை 2004 ஆம் ஆண்டு தொடங்கியது. வே. இளஞ்செழியன், இராதாகிருஷ்ணன், சு. முகுந்தராஜ், விஜெய் ஆகியோர் இத்திட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், 2009 ஆம் ஆண்டு, அண்ணா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாலதி செல்வராஜ், சுஜி, ஶ்ரீ ராமதாஸ் ஆகியோர் விடுபட்டு போன திட்டத்திற்குப் புத்துயிர் கொடுத்தனர். 2010 இல், முனை. கேவின் ஸ்கேனல் குருபடான் 2.0 என்ற தனது வலை-தவழ் பொறியைக் கொண்டு 50 இலட்சம் தமிழ் சொற்தொகுதியை உருவாக்கினார். இச்சொல்திருத்தி, அத்தொகுதியின் அடிப்படையில் அமைந்திருக்கிறது. அவரைத் தவிர்த்து, ஹன்ஸ்பெல்லைத் தயாரித்த லாசி நெமெத்தும் அறிவுரைகளை வழங்கினார். முனை. ந. தெய்வசுந்தரம் அவர்களும் மொழி ஆய்வு பற்றிய அரிய கருத்துகளைத் தந்து உதவினார். -  தமிழா! குழுவினர். https://addons.mozilla.org/en-US/firefox/addon/thamizha-solthiruthi/ மிகவும் உபயோகமான ஒன்று. பயன்படுத்திப் பாருங்கள்.

விண்டோஸ் பயன்பாடுகளை சுலபமாக திறக்க அற்புதமான மென்பொருள்

நமது கணினியில் எதாவது ஒரு பயன்பாட்டினை திறப்பதற்கு பெரும்பாலும் நாம் கணினி முகப்பில் இருக்கும் ஐகானை கிளிக் செய்வோம். அல்லது runல் சென்று அதன் பெயரை அடிப்போம். உதாரணமாக நெருப்பு நரி உலவியை திறக்க வேண்டும் என்றால் firefox என்று தவறில்லாமல் அடிக்க வேண்டும். மேலும் முழு வார்த்தையையும் அடிக்க வேண்டும். மேலும் கணினியில் நிறுவப்பட்ட பல பயன்பாடுகளை இதுபோல் திறப்பது என்பது சற்று கடினம் எனவே இந்த மென்பொருள் இது போன்று பயன்பாடுகளை தொடங்க வைப்பதற்கு நமக்கு ஒரு எளிய வழியை கொடுக்கிறது. உதாரணமாக firefox browserஐ திறக்க முதல் முறை fire என அடித்தால் அந்த வார்த்தை உள்ள அனைத்து மென்பொருட்களையும் காட்டும். நீங்கள் firefoxஐ தேர்வு செய்து அதனை திறந்து கொள்ளலாம். அடுத்த முறை நீங்கள் வெறும் fi என்று அடித்தவுடனே firefoxஇனை காட்டும். நீங்கள் உடனே எண்டர் தட்டி அதனை திறந்து கொள்ளலாம்.

கன்சோல் கேம்களை நமது கணினியில் விளையாட

கேமிங்கன்சோல்கள் என்பவை கேம்கள் விளையாடுவதற்காக உருவாக்கப்பட்ட கருவிகள். இதனால் உருவாக்கப்படும் ஆடியோ, மற்றும் வீடியோக்கள் டிவி அல்லது அது போன்ற வெளியீட்டு சாதனங்களுடன் இணைக்கப்பட்டிருக்கும். இது நம்மில் பெரும்பாலோருக்கு தெரிந்திருக்கும் விஷயம். உதாரணமாக சோனியின் playstation மற்றும் மைக்ரோசாப்டின் xbox-360 ஆகியவற்றை கூறலாம். இது மட்டும் அல்லாமல் ஏராளமான் கேமிங் கன்சோல்கள் உள்ளன. இந்த கன்சோல் அவற்றிற்கென் தனியாக உருவாக்கப்பட்ட சிடி/டிவிடிகளை மட்டுமே செயல்படுத்தும். உதாரணமாக நீங்கள் playstation கன்சோலிர்கான டிவிடியினை வாங்க வேண்டும் என்றால் அது அந்த கன்சோலினாள் படிக்கப்படக்கூடிய உருமாட்டில் இருக்கவேண்டும்.

படங்களை 700mbயில் தரமாக உருமாற்றம் செய்ய

நம்மிடம் இருக்கும் டிவிடிபடங்களில் பிடித்தவற்றை அவ்வப்போது பார்த்துக்கொள்ள நாம் அவற்றை தனியாகவோ அல்லது, இமேஜாகவோ காபி செய்து வைத்துக்கொள்வோம். அவை அதிக இடத்தை பிடித்துக்கொள்ளும் ஒவ்வொன்றும் படத்திற்கேற்ற மாதிரி 2 முதல் 4 ஜிபி வரை கொள்ளளவு கொண்டிருக்கும். எனவே நாம் அவற்றை அதன் அளவில் குறைத்து அதனை வேறு உருமாட்டில் சேமித்து வைத்துக்கொள்ள விரும்புவோம். அவ்வாறு அதனை மாற்றுவதால் நம்முடைய கணினியின் இடம் மிச்சமாகிறது, மேலும் எளிதாக அவற்றை நம் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். அளவில் குறைவாக இருப்பதால் இணையத்திலும் அவற்றை ஏற்றி அதனை மற்றவர்களுடன் எளிதாக பகிர்ந்துகொள்ளலாம். ஆனால் இதில் இருக்கும் ஒரு குறைபாடு அதன் தரம். அதில் மாற்றத்தை நன்றாக பார்க்கமுடியும். சில மாற்றப்பட்ட வீடியோக்கள் தரம் குறைவாக இருக்கும். வீடியோ கன்வர்ட்டர்களை பயன்படுத்தும் பலருக்கு இது நன்கு தெரிந்திருக்கும். இணையங்களில் டோரண்ட்களை பயன்படுத்தி படம் இறக்குபவர்க்கள் 700mb களில் தரமான படங்கள் இருப்பதை பார்த்திருக்கலாம். நாம் எவ்வாறு இதுபோன்று தரமாக வீடியோக்களை மாற்றுவது என்று பார்ப்போம்.

தயாரித்த சிடி/டிவிடி இமேஜ்களை மௌண்ட்(mount) செய்தல்

சென்ற பதிவில் கூறியது போல் நாம் தயாரித்த சிடி/டிவிடியின் நகல் ஆனது பெரும்பாலும் iso,nrf,uif,bin,cue போன்ற பார்மட்களில் இருக்கும். அதுதான் சிடி/டிவிடி இமேஜ் ஆகும். இதனை நாம் winrar போன்ற கம்ப்ரஸ்ஷன் மென்பொருள் மூலம் திறந்து பார்க்கமுடியும். ஆனால் mountசெய்வது என்பது வேறானது. ஒரு நிஜ சிடி/டிவிடி டிரைவினை(hardware) நம் கணினியில் இணைக்காமல் ஆனால் ஒரு புது டிரைவினை நாம் இணைத்திருப்பது போல் போல் நம் கணினியில் உருவகிப்பது ஆகும். அதாவது நாம் தயாரித்த

சிடி/டிவிடிகளை காப்பி செய்யாதீர்கள்.

நாம் பொதுவாக டிவிடி படங்களை நம்முடைய கணினிகளில் டிவிடி டிரைவ்களில் போட்டு பார்ப்பது பழக்கம். நாம் நண்பர்களிடம் இருந்தோ அல்லது வேறுயாரிடமாவது இருந்தோ படங்களை வாங்கி உடனே பார்த்துவிட்டு தருவதற்கு முடியவில்லை என்றால் நாம் படங்களை காப்பி செய்து அதனை நம் கணினீயில் சேமிப்போம். அவ்வாறு சேமித்த படங்களை டிவிடி டிரைவில் போட்டு பார்ப்பது போன்றே சௌகரியமாக பார்ப்பது என்பது இயலாது. ஒவ்வொரு fileஐயும் நாம் விடியோ ப்ளேயரில் திறக்க வேண்டும். அதில் பலவிதமான fileகள் இருக்கும். நாம் ஒவ்வொன்றாக திறந்து நாம் பார்க்க வேண்டிய அந்த படத்தை பார்ப்பதற்குள் நேரம் ஆகிவிடும். சில fileகள் ஒழுங்காக காப்பி ஆகியிருக்காது. சில டிவிடிக்கள் காப்பி ஆக மறுக்கும்.

CD/DVD டிரைவ்களுக்கு பெயர் மாற்றம் செய்ய

 உங்கள் கணினியில் சாதரண hard-disk partitionகளுக்கு பெயர் வைத்துவிடலாம். ஆனால் cd/dvd டிரைவ் களுக்கு நம்மால்.பெயர் மாற்ற முடியாது. நாம் ஒன்றுக்கு மேற்பட்ட cd/dvd டிரைவ்களையோ அல்லது virtual டிரைவ்களையோ உபயோகிப்போமானால் கண்டிப்பாக குழப்பம் ஏற்படும். இதனை சமாளிக்க இந்த மென்பொருள் உதவுகிறது.

உங்கள் கணினியின் வேகத்தை அதிகரிக்க 10 எளிய வழிகள்

1. உங்கள் கணினி முழுவதும் boot ஆகியவுடன் சிறிது நேரம் கழித்து உங்கள் வேலையை செய்யுங்கள். ஏனெனில் கணினி தொடங்கியவுடன் சில applicationகள் தானாக இயங்குமாறு அமைக்கப்பட்டிருக்கும். (antivirus, gtalk, etc.,) அவை தொடங்கும் போது நாம் எதாவது driveஐயோ அல்லது applicationஐயோ திறந்தால் ஒரே நேரத்தில் இரண்டும் தொடங்க அதிக நேரம் ஆகும். 2. எதாவது applicationஐ மூடியவுடன் refresh செய்யவும். இது RAMல் இருந்து தேவையற்ற தற்காலிக fileகளை நீக்க உதவும். 3. அதிகமான அளவு உள்ள wallpaperகளை செட் செய்யாதிர்கள்.

உங்கள் கண்களை மானிட்டரிடமிருந்து பாதுகாக்க

நம்முடைய கணினியை காப்பாற்ற antivirus, firewall போன்ற பலவற்றை பயன்படுத்துகிறோம். ஆனால் நம் உடல் நலனை பாதுகாப்பதை பலர் மறந்துவிடுகிறேம். நம் உடல் நலமே மிக முக்கியம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அதிக நேரம் கணினி முன் வேலை செய்பவர்களுக்கும், பார்ப்பவர்களுக்கும் இது மிகவும் பயன்படும். இரவு நேரங்களில் நீங்கள் நீண்ட உங்கள் பதிவுகளையோ, கடிதங்களையோ type அடித்து கொண்டு இருப்பீர்களா? உங்கள்

சிறந்த, இலவச ரேபிட் தரவிறக்கி-Free Rapid(share)downloader

FreeRapid Downloader 0.85u1 | 11 MB Rapidshare, mediafire, filesonic போன்ற பைல் ஷேரிங் தளங்களில் இருந்து பைல்களை தரவிரக்க ஒரு சிறந்த தரவிரக்கி.  க்ளிக் செய்வது, காத்திருப்பது போன்று நேரத்தை வீணடிக்காமல் வெறும் லிங்க்கை காப்பி செய்து இதில் பேஸ்ட் செய்தாலே போதும். மற்றதை இது பார்த்துக்கொள்ளும்.