Skip to main content

கன்சோல் கேம்களை நமது கணினியில் விளையாட

கேமிங்கன்சோல்கள் என்பவை கேம்கள் விளையாடுவதற்காக உருவாக்கப்பட்ட கருவிகள். இதனால் உருவாக்கப்படும் ஆடியோ, மற்றும் வீடியோக்கள் டிவி அல்லது அது போன்ற வெளியீட்டு சாதனங்களுடன் இணைக்கப்பட்டிருக்கும். இது நம்மில் பெரும்பாலோருக்கு தெரிந்திருக்கும் விஷயம். உதாரணமாக சோனியின் playstation மற்றும் மைக்ரோசாப்டின்
xbox-360 ஆகியவற்றை கூறலாம். இது மட்டும் அல்லாமல் ஏராளமான் கேமிங் கன்சோல்கள் உள்ளன. இந்த கன்சோல் அவற்றிற்கென் தனியாக உருவாக்கப்பட்ட சிடி/டிவிடிகளை மட்டுமே செயல்படுத்தும். உதாரணமாக
நீங்கள் playstation கன்சோலிர்கான டிவிடியினை வாங்க வேண்டும் என்றால் அது அந்த கன்சோலினாள் படிக்கப்படக்கூடிய உருமாட்டில் இருக்கவேண்டும்.
நீங்கள் வாங்கும்போதே அந்த டிவிடி கவரின் லேபிலில் அது எந்த வகை என்று
பொறிக்கப்பட்டிருக்கும். இந்த கன்சோல் கேம்களை அந்தந்த கன்சோல்களில் மட்டுமே உபயோகிக்கமுடியும் என்று சொல்லிவிட்டேன். ஆனால் சில மென்பொருட்களை கொண்டு சில கன்சோல் கேம்களை நமது கணினியிலும் விளையாடலாம். அது பற்றிய எனது இந்த சிறிய பகிர்வு இது.


NINTENDO 64 GAMES
 
 
 
 

மேலே உள்ள படத்தினை பார்த்தவுடன் எங்கோ பார்த்த ஞாபகம் வருகிறதா. ஆம் நாம் சிறுவயதில் விளையாடியிருப்போம். ஒரு பிளாஸ்டிக் அடைப்பின் நடுவே இருக்கும் ஒரு சிறு சில்லு. அதனை அந்த கன்சோலில் போட்டு டிவியில் விளையாடியிருப்போம். இது அது போன்று தோற்றம் அளித்தாலும் இது அதுவல்ல. அதனைவிட இது சற்று கூடுதல் வசதி கொண்ட கன்சோல். ஆம் இதில் அனைத்து விளையாட்டுக்களும் 3டி கேம்கள். இது முதலில் ஜப்பானில் june 23, 1996 ல் வெளியிடப்பட்டது. இந்த கன்சோல்களில் 387 கேம்களை வெளியிட்டுள்ளனர். அதில் பிரபலாமானவை Super Mario 64, Star Wars: Shadows of the Emmpire, Turok: Dinosaur Hunter கடைசியாக வெளியிடப்பட்ட
கேம் Tony Hawk's Pro Skater 3 (2003ம் ஆண்டு). இதில் அதிகமாக விற்பனையான விளையாட்டு என்றால் அது Super Mario 64. இது 11 மில்லியன்
யூனிட்டுகளை விற்று தீர்த்தது. இவை தற்போது புழக்கத்தில் இல்லை. இந்தியாவிற்கு வந்ததா என்பது கூட எனக்கு தெரியாது. ஆனால் தற்போது இதன் இடத்தினை sony playstaion, xbox போன்றவை பிடித்துவிட்டன.

சரி. இந்த Nintendo 64 கேம்களை எவ்வாறு விளையாடுவது என்று பார்க்கலாம்.

இந்த மென்பொருளின் பெயர் project 64. இது Nintendo 64 கேம்களுக்கான emulator. இதன் அளவு வெறும் 2 mb க்கும் குறைவானது இதனை இங்கிருந்து தரவிறக்கி கொள்ளவும். click here.
அடுத்து நமக்கு தேவை ஒரு n64 ROM அல்லது கேசட். எதாவது ஒன்றினை இங்கிருந்து தரவிறக்கி கொள்ளவும். http://www.freeroms.com/n64.htm
என்னுடைய தேர்வு super mario 64. இதனை தரவிறக்கி எங்காவது சேமிக்கவும்.



இப்போது உங்கள் project 64 ஐ திறங்கள். அடுத்து file சென்று open ROMல் உங்கள் ROM உள்ள இடத்தினை காட்டி திறந்து கொள்ளவும். அவ்வளவு தான் விளையாடி மகிழுங்கள். இதில் கண்ட்ரோல் கீக்களை மாற்றம் செய்யவோ அல்லது பார்க்கவோ option சென்று பார்க்கவும். இணையத்தில்
இந்த ROMகள் நிறையவுள்ளன. அதனை நீங்கள் சுலபமாக தேடி தரவிறக்கி கொள்ளலாம். எனக்கு பிடித்த கேம்களில் சில:


இது எந்த அளவுக்கு பிறர்க்கு பயன்படும் என்பது எனக்கு தெரியவில்லை. இருந்தும் இதனை நான் கூற காரணம் பல இருக்கிறது. முதலாவது இது எனக்கு தெரிந்த ஒன்று. எனக்கு தெரிந்த விஷயத்தை பிறருக்கு சொல்ல வேண்டும் போல இருந்த்து ஏனெனில் sharing is sweet. இரண்டாவது இது நம் நாட்டு game developerகளுக்கு உதவலாம். கேம்கள் பிரமாண்டத்தை மட்டும் வைத்துகொண்டு வெற்றிபெருவதில்லை. அதன் story, screen play, characters மற்றும் பல பல்வேறு சிறு விஷயங்கள் கூட அதனை பிரபலமாக்கலாம். உதாரணத்திற்கு angrybirdஐ எடுத்துக்கொள்ளுங்கள். பெரிதாக ஒன்றும் பிரமாண்டம் இல்லை, வெட்டு,குத்து இல்லை, கதை கூட ஒரு சப்ப காரணம் தான். ஆனாலும் அதன் எளிமை அனைவரையும் கவர்ந்துவிட்டது. இன்றும் ஆப்பிள் ஸ்டோரில் கல்லா கட்டுகிறது.

உங்களுக்கு வீடியோ-கேம்கள் பற்றிய இந்த பகிர்வு பிடித்திருந்தால் உங்கள் கருத்துகளை கூறுங்கள். இது போன்ற விஷயங்களை எழுதலாமா என்றும் எனக்கு தெரியவில்லை. எனவே இது எந்த அளவுக்கு உபயோகமானது என்று மறக்காமல் கூறுங்கள். உங்கள் கனிவான கருத்துகளை
எதிர்பார்க்கிறேன்.

Comments

  1. கனினி நுட்ப பதிவுகளுக்கு தனி வலைப்பூ உருவாக்கி டாப் டென்னில் இடம் பெறலாமே

    ReplyDelete
  2. விடுமுறைகாலத்திற்கேற்ற பயனுள்ள பதிவு.(பெற்றோர்களுக்கு) :)

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

கட்டற்றமென்பொருள் பற்றிய மாத மின்இதழ்

உலகெங்கிலும் உள்ள தமிழ் மக்களுக்கு கணினிதொழில்நுட்பத்தை பற்றி அறிமுகம் செய்யும் கணியம் என்ற புதிய மாத மின்னிதழை வெளியிடுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். கணினி கற்க ஆங்கிலம் தடையாக இருந்த காலம் மாறி தொழில்னுட்பங்கள் யாவும் தமிழில் பெருகும் இந்த காலத்தில் மென்பொருள் பற்றிய நுட்பங்களை தமிழில் வழங்குவதில் பெருமை கொள்கிறோம். இந்த இதழின் கட்டுரைகள் : கட்டற்ற மென்பொருள் லினக்ஸ் பயனர் குழு – ஓர் அறிமுகம் உபுண்டு நிறுவுதல்

படங்களை 700mbயில் தரமாக உருமாற்றம் செய்ய

நம்மிடம் இருக்கும் டிவிடிபடங்களில் பிடித்தவற்றை அவ்வப்போது பார்த்துக்கொள்ள நாம் அவற்றை தனியாகவோ அல்லது, இமேஜாகவோ காபி செய்து வைத்துக்கொள்வோம். அவை அதிக இடத்தை பிடித்துக்கொள்ளும் ஒவ்வொன்றும் படத்திற்கேற்ற மாதிரி 2 முதல் 4 ஜிபி வரை கொள்ளளவு கொண்டிருக்கும். எனவே நாம் அவற்றை அதன் அளவில் குறைத்து அதனை வேறு உருமாட்டில் சேமித்து வைத்துக்கொள்ள விரும்புவோம். அவ்வாறு அதனை மாற்றுவதால் நம்முடைய கணினியின் இடம் மிச்சமாகிறது, மேலும் எளிதாக அவற்றை நம் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். அளவில் குறைவாக இருப்பதால் இணையத்திலும் அவற்றை ஏற்றி அதனை மற்றவர்களுடன் எளிதாக பகிர்ந்துகொள்ளலாம். ஆனால் இதில் இருக்கும் ஒரு குறைபாடு அதன் தரம். அதில் மாற்றத்தை நன்றாக பார்க்கமுடியும். சில மாற்றப்பட்ட வீடியோக்கள் தரம் குறைவாக இருக்கும். வீடியோ கன்வர்ட்டர்களை பயன்படுத்தும் பலருக்கு இது நன்கு தெரிந்திருக்கும். இணையங்களில் டோரண்ட்களை பயன்படுத்தி படம் இறக்குபவர்க்கள் 700mb களில் தரமான படங்கள் இருப்பதை பார்த்திருக்கலாம். நாம் எவ்வாறு இதுபோன்று தரமாக வீடியோக்களை மாற்றுவது என்று பார்ப்போம்.

சிடி/டிவிடிகளை காப்பி செய்யாதீர்கள்.

நாம் பொதுவாக டிவிடி படங்களை நம்முடைய கணினிகளில் டிவிடி டிரைவ்களில் போட்டு பார்ப்பது பழக்கம். நாம் நண்பர்களிடம் இருந்தோ அல்லது வேறுயாரிடமாவது இருந்தோ படங்களை வாங்கி உடனே பார்த்துவிட்டு தருவதற்கு முடியவில்லை என்றால் நாம் படங்களை காப்பி செய்து அதனை நம் கணினீயில் சேமிப்போம். அவ்வாறு சேமித்த படங்களை டிவிடி டிரைவில் போட்டு பார்ப்பது போன்றே சௌகரியமாக பார்ப்பது என்பது இயலாது. ஒவ்வொரு fileஐயும் நாம் விடியோ ப்ளேயரில் திறக்க வேண்டும். அதில் பலவிதமான fileகள் இருக்கும். நாம் ஒவ்வொன்றாக திறந்து நாம் பார்க்க வேண்டிய அந்த படத்தை பார்ப்பதற்குள் நேரம் ஆகிவிடும். சில fileகள் ஒழுங்காக காப்பி ஆகியிருக்காது. சில டிவிடிக்கள் காப்பி ஆக மறுக்கும்.