Skip to main content

தமிழா சொல்திருத்தி - நெருப்பு-நரி ஆட்ஆன்

இச்சொல்திருத்தி, பலரது தொண்டூழிய உழைப்பின் வெளிப்பாடு ஆகும்.

இது தன் பயணத்தை 2004 ஆம் ஆண்டு தொடங்கியது. வே. இளஞ்செழியன், இராதாகிருஷ்ணன், சு. முகுந்தராஜ், விஜெய் ஆகியோர் இத்திட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர், 2009 ஆம் ஆண்டு, அண்ணா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாலதி செல்வராஜ், சுஜி, ஶ்ரீ ராமதாஸ் ஆகியோர் விடுபட்டு போன திட்டத்திற்குப் புத்துயிர் கொடுத்தனர்.

2010 இல், முனை. கேவின் ஸ்கேனல் குருபடான் 2.0 என்ற தனது வலை-தவழ் பொறியைக் கொண்டு 50 இலட்சம் தமிழ் சொற்தொகுதியை உருவாக்கினார். இச்சொல்திருத்தி, அத்தொகுதியின் அடிப்படையில் அமைந்திருக்கிறது.
அவரைத் தவிர்த்து, ஹன்ஸ்பெல்லைத் தயாரித்த லாசி நெமெத்தும் அறிவுரைகளை வழங்கினார். முனை. ந. தெய்வசுந்தரம் அவர்களும் மொழி ஆய்வு பற்றிய அரிய கருத்துகளைத் தந்து உதவினார்.
-  தமிழா! குழுவினர்.


https://addons.mozilla.org/en-US/firefox/addon/thamizha-solthiruthi/

மிகவும் உபயோகமான ஒன்று. பயன்படுத்திப் பாருங்கள்.

Comments

Popular posts from this blog

ரிதம்பாக்ஸில் ரேடியோ மிர்ச்சி

உபுண்டு 12.04ல் bansheeயை தூக்கிவிட்டு மறுபடியும் rhythmbox default இசைப்பானாக இடம்பெற்றுள்ளது. ரிதம்பாக்ஸ்ல் bansheeயை விட பல அம்சங்கள் குறைவுதான். ஏன் banshee ஐ எடுத்தார்கள் என்று  சரியாக புரியவில்லை. என்னதான் high-bitrateல் பாடல்கள் இருந்தாலும் fm கேட்பது ஒரு மகிழ்ச்சிதான். சில வருடங்களுக்கு முன்பு எங்கள் தெருக்களில் சூரியன் fm, ரேடியோ மிர்ச்சி போன்றவை தான் என்னை எழுப்பும்.

உபுண்டு டெர்மினலில் இருந்து இலவசமாக sms அனுப்பலாம்

இன்று டெர்மினலில் இருந்து எப்படி இலவசமாக sms அனுப்புவது என்று பார்க்கலாம். way2sms சென்று sms அனுப்புவதற்கு அந்த தளத்தின் விளம்பரங்களை தாண்டிதான் அனுப்ப வேண்டியிருக்கிறது. விளம்பரங்களை பார்க்கமால் சுலபமாக இந்த script ஐ பயன்படுத்தி இலவசமாக sms அனுப்பலாம். இதற்கு முதலில் way2sms ன் பயனராக இருக்க வேண்டும். இல்லை என்றால way2sms.com சென்று ஒரு அக்கவுண்டினை தொடங்கிகொள்ளவும். username, password  வேண்டும்.

விண்டோஸை விட லினக்ஸ் சிறந்தது: பத்து காரணங்கள்

லினக்ஸ் பயன்படுத்த கடினம், விண்டோஸே சிறந்தது என கருதுபவர்களுக்காக 1. வைரஸ் அபாயம் கிடையாது: ஆம். பொரும்பாலான வைரஸ் நிரல்கள் விண்டோஸிற்காக எழுதப்படுபவை. லினக்ஸால் win32  நிரல்களை  செயல்படுத்த முடியாது. எனவே வைரஸ் வரும் என்ற கவலை வேண்டாம். 2. திற-மூலமென்பொருள் - விண்டோஸ் போல் அல்லாமல் லினக்ஸ் ஆனது திற-மூல-இயங்குதளம்(open-source).  எனவே நம்முடைய தேவைக்கு ஏற்ப நாம் இதனை மாற்றவே, பிறருக்கு அளிக்கவோ முழு சுதந்திரம் உண்டு.