Skip to main content

விண்டோஸ் பயன்பாடுகளை சுலபமாக திறக்க அற்புதமான மென்பொருள்

நமது கணினியில் எதாவது ஒரு பயன்பாட்டினை திறப்பதற்கு பெரும்பாலும் நாம் கணினி முகப்பில் இருக்கும் ஐகானை கிளிக் செய்வோம். அல்லது runல் சென்று அதன் பெயரை அடிப்போம். உதாரணமாக நெருப்பு நரி உலவியை திறக்க வேண்டும் என்றால் firefox என்று தவறில்லாமல் அடிக்க வேண்டும். மேலும் முழு வார்த்தையையும் அடிக்க வேண்டும். மேலும் கணினியில் நிறுவப்பட்ட பல பயன்பாடுகளை இதுபோல் திறப்பது என்பது சற்று கடினம் எனவே இந்த மென்பொருள் இது போன்று பயன்பாடுகளை தொடங்க வைப்பதற்கு நமக்கு ஒரு எளிய வழியை கொடுக்கிறது. உதாரணமாக firefox browserஐ திறக்க முதல் முறை fire என அடித்தால் அந்த வார்த்தை உள்ள அனைத்து மென்பொருட்களையும் காட்டும். நீங்கள் firefoxஐ தேர்வு செய்து அதனை திறந்து கொள்ளலாம். அடுத்த முறை நீங்கள் வெறும் fi என்று அடித்தவுடனே firefoxஇனை காட்டும். நீங்கள் உடனே எண்டர் தட்டி அதனை திறந்து கொள்ளலாம்.





மேலும் உடனடியாக ஒரு இனையதளத்திற்கு செல்ல வேண்டும் என்றால் இதில் அந்த இனணையமுகவரியை அடித்தால் போதும். உடண்டியாக அங்கு சென்றுவிடலாம்.

இதனை திறப்பதும் மிக எளிது உங்கள் கீ போர்டில் alt+space கீகளை அழுத்தியவுடன் launchy உங்கள் கட்டளைக்கு காத்திருக்கும்.
நீஙக்ள் செய்வேண்டியதெல்லாம் நீங்கள் திறக்க வேண்டிய பயன்பாடு சம்பந்தமான ஓரிரு எழுத்துகளை அடிக்க வேண்டியதுதான்.

இதன் மற்றொரு சிறப்பு அம்சம் இது ஒரு திறமூல இலவச மென்பொருள். இந்த மென்பொருளுடன் அழகழகான ஸ்கின்களும் கிடைக்கின்றன. மேலும் பல பிளக்-இன்ஸ் கூட இருக்கிறது. உங்களுக்கு பயன்படுபவற்றை நீங்கள் தரவிறக்கி பயன்படுத்திக்கொள்ளலாம்.



உதாரணமாக MathyResurrected என்ற pluginஐ தரவிறக்கி(வெறும் 120kb தான்)அதனை லாஞ்சியின் plugin ஃபோல்டரில் போடுங்கள். அதனை ஓபன் செய்து இனிமேல் உங்கள் கணக்குகளை அதிலேயே போடலாம். பெரிய பெரிய கணக்குகளை கூட அசால்டாக அதிலேயே கொடுத்து விடையை பெறலாம்.

மேலும் system power என்ற plugin கணினியினை shutdown, restart, hibernate போன்றவற்றை மேற்கொள்ள உதவுகிறது.


இதுபோன்று பல plug-inகள் உள்ளன. இது போன்ற பல உபயோகமான விஷயங்கள் இதில் உள்ளது. இது விண்டோஸ் பயனர்களுக்கு மிகவும் பயன்படும் மென்பொருள். அனைத்து இயங்குதளங்களுக்குமான பதிப்புகள் உள்ளன. இதன் plug-inகள் தற்போது விண்டோஸ் பதிப்புக்கு மட்டுமே செயல்படும்.

இதன் இணையதளம்: http://www.launchy.net

இதனை தரவிறக்க: click here

Comments

Popular posts from this blog

கட்டற்றமென்பொருள் பற்றிய மாத மின்இதழ்

உலகெங்கிலும் உள்ள தமிழ் மக்களுக்கு கணினிதொழில்நுட்பத்தை பற்றி அறிமுகம் செய்யும் கணியம் என்ற புதிய மாத மின்னிதழை வெளியிடுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். கணினி கற்க ஆங்கிலம் தடையாக இருந்த காலம் மாறி தொழில்னுட்பங்கள் யாவும் தமிழில் பெருகும் இந்த காலத்தில் மென்பொருள் பற்றிய நுட்பங்களை தமிழில் வழங்குவதில் பெருமை கொள்கிறோம். இந்த இதழின் கட்டுரைகள் : கட்டற்ற மென்பொருள் லினக்ஸ் பயனர் குழு – ஓர் அறிமுகம் உபுண்டு நிறுவுதல்

விண்டோஸை விட லினக்ஸ் சிறந்தது: பத்து காரணங்கள்

லினக்ஸ் பயன்படுத்த கடினம், விண்டோஸே சிறந்தது என கருதுபவர்களுக்காக 1. வைரஸ் அபாயம் கிடையாது: ஆம். பொரும்பாலான வைரஸ் நிரல்கள் விண்டோஸிற்காக எழுதப்படுபவை. லினக்ஸால் win32  நிரல்களை  செயல்படுத்த முடியாது. எனவே வைரஸ் வரும் என்ற கவலை வேண்டாம். 2. திற-மூலமென்பொருள் - விண்டோஸ் போல் அல்லாமல் லினக்ஸ் ஆனது திற-மூல-இயங்குதளம்(open-source).  எனவே நம்முடைய தேவைக்கு ஏற்ப நாம் இதனை மாற்றவே, பிறருக்கு அளிக்கவோ முழு சுதந்திரம் உண்டு.

சிடி/டிவிடிகளை காப்பி செய்யாதீர்கள்.

நாம் பொதுவாக டிவிடி படங்களை நம்முடைய கணினிகளில் டிவிடி டிரைவ்களில் போட்டு பார்ப்பது பழக்கம். நாம் நண்பர்களிடம் இருந்தோ அல்லது வேறுயாரிடமாவது இருந்தோ படங்களை வாங்கி உடனே பார்த்துவிட்டு தருவதற்கு முடியவில்லை என்றால் நாம் படங்களை காப்பி செய்து அதனை நம் கணினீயில் சேமிப்போம். அவ்வாறு சேமித்த படங்களை டிவிடி டிரைவில் போட்டு பார்ப்பது போன்றே சௌகரியமாக பார்ப்பது என்பது இயலாது. ஒவ்வொரு fileஐயும் நாம் விடியோ ப்ளேயரில் திறக்க வேண்டும். அதில் பலவிதமான fileகள் இருக்கும். நாம் ஒவ்வொன்றாக திறந்து நாம் பார்க்க வேண்டிய அந்த படத்தை பார்ப்பதற்குள் நேரம் ஆகிவிடும். சில fileகள் ஒழுங்காக காப்பி ஆகியிருக்காது. சில டிவிடிக்கள் காப்பி ஆக மறுக்கும்.