Skip to main content

தயாரித்த சிடி/டிவிடி இமேஜ்களை மௌண்ட்(mount) செய்தல்

சென்ற பதிவில் கூறியது போல் நாம் தயாரித்த சிடி/டிவிடியின் நகல் ஆனது
பெரும்பாலும் iso,nrf,uif,bin,cue போன்ற பார்மட்களில் இருக்கும். அதுதான் சிடி/டிவிடி இமேஜ் ஆகும். இதனை நாம் winrar போன்ற கம்ப்ரஸ்ஷன் மென்பொருள் மூலம் திறந்து பார்க்கமுடியும். ஆனால் mountசெய்வது என்பது வேறானது. ஒரு நிஜ சிடி/டிவிடி டிரைவினை(hardware) நம் கணினியில்
இணைக்காமல் ஆனால் ஒரு புது டிரைவினை நாம் இணைத்திருப்பது போல்
போல் நம் கணினியில் உருவகிப்பது ஆகும். அதாவது நாம் தயாரித்த
சிடி/டிவிடி இமேஜ்களை ஒரு உண்மையான சிடி/டிவிடியில் எரிக்காமல் அதனை உண்மையான எரித்த சிடி/டிவிடி போல் பாவிப்பது. நாம் எதேனும் ஒரு computer gameஇனை இமேஜ் ஆக உருவாக்கியோ, அல்லது இணையத்திலிருந்து தரவிறக்கியோ இருப்போம். அது பெரும்பாலும் .iso இமேஜ் ஆக இருக்கும், நாம் அந்த கேமினை நம் கணினியில் நிருவ வேண்டும் என்றால் அதனை ஒரு சிடி/டிவிடியில் எரித்து பயன்படுத்த வேண்டும். அதற்கு பதிலாக நாம்
இந்த விர்ச்சுவல் டிரைவ் முறையினை பயன்படுத்தி கணினியில் நிறுவிக்கொள்ளலாம். இதனை மேற்கொள்ள நமக்கு எதாவது ஒரு விர்ச்சுவல் டிரைவ் மென்பொருள் தேவை. நீங்கள் nero உபயோகிப்பவர் என்றால்
அதில் virtual driveயினை பயன்படுத்திக்கொள்ளலாம். நாம் இங்கு பார்க்கப்போவது DEAMON TOOL என்ற விர்ச்சுவல் மென்பொருள். இது எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. எனவே இதனை பற்றி பார்ப்போம். இது இலவசமான மென்பொருள் ஆகும். இதனை இன்ஸ்டால் செய்யும் போது free license என்பதை தேர்வு செய்யுங்கள். இது பயன்படுத்தவும் சுலபம்தான்.
இதனை கீழிருந்து தரவிறக்கிக்கொள்ளவும்.
download page:click 


இதனை உங்கள் கணினியில் நிறுவியவுடன் உங்கள் my computerல் புதிதாக டிவிடி டிரைவ் ஒன்று வந்திருப்பதை பாருங்கள். இதுதான் விர்ச்சுவல் டிரைவ். நாம் எந்த வித புது டிரைவினையும் இணைக்கவில்லை ஆனால் நம் கணினிக்கு புதிதாக இணைத்திருப்பது போன்று இந்த மென்பொருள் உருவாக்குகிறது. நாம் தயாரித்த சிடி/டிவிடி இமேஜ்-களை எப்படி மௌண்ட் செய்வது என்று காணலாம்.


1. முதலில் DEAMON TOOLஇனை திறந்து கொள்ளுங்கள்.
2. அதில் Add file என்பதை கிளிக் செய்து உங்கள் கணினியில் உள்ள இமேஜ்-களை சேர்த்துவிடுங்கள்.
3. அவை மேலே உள்ள Image Catalogல் தெரியும்.
4. பிறகு அதனை தேர்வு செய்து பக்கத்தில் இருக்கும் Mount எனும் பட்டனை அழுத்தவும். அல்லது அதனை வலது கிளிக் செய்தும் mount செய்யலாம்.

உங்களுக்கு மேலும் விர்ச்சுவல் டிரைவ் தேவை என்றால் Add device பட்டனை கிளிக் செய்து சேர்த்துக்கொள்ளலாம்.
மேலும் இதன் மூலம் சிடி/டிவிடி இமேஜ்களை உருவாக்கலாம். அதனை நிஜ சிடி/டிவிடிகளிலும் எரிக்கலாம்.



உங்கள் taskbarல் உள்ள deamontool iconஐ வலது கிளிக் செய்தும் இமெஜ்-களை மௌண்ட் செய்யலாம்.
இது பெரும்பாலும் பலருக்கு தெரிந்திருந்தாலும், புதியர்வர்களுக்கு உதவும் என நம்புகிறேன்.
உங்களுக்கு இது பிடித்த்ருந்தால் உங்கள் ஓட்டினையும், கருத்துகளையும் தெரிவியுங்கள்.

Comments

  1. Boss Super. oru video dvd la epadi 2 movies burn pandrathu konjam sollungal. torrent la download pannana moviesai epadi video dvd yaga (2 movies) burn pandrathu..

    ReplyDelete
  2. உங்கள் கருத்துக்கு நன்றி நண்பா..

    நீங்க ஒரு டிவிடில ரெண்டு என்ன. உங்க டிவிடில 4.7 gb க்கு எத்தனை படம் பத்துதோ அத்தனை
    படம் write பன்னலாம். அதுக்கு உங்க டிவிடி விடியோவை avi formatக்கோ இல்லன divx, xvid, mkv formatக்கோ கன்வர்ட் பன்னுங்க. அப்படி பன்னிங்கன்ன கிட்டத்தட்ட 700mb சைஸ் வந்துடும். நீங்க 5 இல்லனா 6 படம் கூட write பன்னிக்கலாம். ஆனா ஒரு விஷயம். உங்க படத்தோட சைஸ் கம்மியாக, கம்மியாக படத்தோட குவாலிட்டி குறைஞ்சிடும்.

    ReplyDelete
  3. Thanks for the info

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

கட்டற்றமென்பொருள் பற்றிய மாத மின்இதழ்

உலகெங்கிலும் உள்ள தமிழ் மக்களுக்கு கணினிதொழில்நுட்பத்தை பற்றி அறிமுகம் செய்யும் கணியம் என்ற புதிய மாத மின்னிதழை வெளியிடுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். கணினி கற்க ஆங்கிலம் தடையாக இருந்த காலம் மாறி தொழில்னுட்பங்கள் யாவும் தமிழில் பெருகும் இந்த காலத்தில் மென்பொருள் பற்றிய நுட்பங்களை தமிழில் வழங்குவதில் பெருமை கொள்கிறோம். இந்த இதழின் கட்டுரைகள் : கட்டற்ற மென்பொருள் லினக்ஸ் பயனர் குழு – ஓர் அறிமுகம் உபுண்டு நிறுவுதல்

படங்களை 700mbயில் தரமாக உருமாற்றம் செய்ய

நம்மிடம் இருக்கும் டிவிடிபடங்களில் பிடித்தவற்றை அவ்வப்போது பார்த்துக்கொள்ள நாம் அவற்றை தனியாகவோ அல்லது, இமேஜாகவோ காபி செய்து வைத்துக்கொள்வோம். அவை அதிக இடத்தை பிடித்துக்கொள்ளும் ஒவ்வொன்றும் படத்திற்கேற்ற மாதிரி 2 முதல் 4 ஜிபி வரை கொள்ளளவு கொண்டிருக்கும். எனவே நாம் அவற்றை அதன் அளவில் குறைத்து அதனை வேறு உருமாட்டில் சேமித்து வைத்துக்கொள்ள விரும்புவோம். அவ்வாறு அதனை மாற்றுவதால் நம்முடைய கணினியின் இடம் மிச்சமாகிறது, மேலும் எளிதாக அவற்றை நம் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். அளவில் குறைவாக இருப்பதால் இணையத்திலும் அவற்றை ஏற்றி அதனை மற்றவர்களுடன் எளிதாக பகிர்ந்துகொள்ளலாம். ஆனால் இதில் இருக்கும் ஒரு குறைபாடு அதன் தரம். அதில் மாற்றத்தை நன்றாக பார்க்கமுடியும். சில மாற்றப்பட்ட வீடியோக்கள் தரம் குறைவாக இருக்கும். வீடியோ கன்வர்ட்டர்களை பயன்படுத்தும் பலருக்கு இது நன்கு தெரிந்திருக்கும். இணையங்களில் டோரண்ட்களை பயன்படுத்தி படம் இறக்குபவர்க்கள் 700mb களில் தரமான படங்கள் இருப்பதை பார்த்திருக்கலாம். நாம் எவ்வாறு இதுபோன்று தரமாக வீடியோக்களை மாற்றுவது என்று பார்ப்போம்.

சிடி/டிவிடிகளை காப்பி செய்யாதீர்கள்.

நாம் பொதுவாக டிவிடி படங்களை நம்முடைய கணினிகளில் டிவிடி டிரைவ்களில் போட்டு பார்ப்பது பழக்கம். நாம் நண்பர்களிடம் இருந்தோ அல்லது வேறுயாரிடமாவது இருந்தோ படங்களை வாங்கி உடனே பார்த்துவிட்டு தருவதற்கு முடியவில்லை என்றால் நாம் படங்களை காப்பி செய்து அதனை நம் கணினீயில் சேமிப்போம். அவ்வாறு சேமித்த படங்களை டிவிடி டிரைவில் போட்டு பார்ப்பது போன்றே சௌகரியமாக பார்ப்பது என்பது இயலாது. ஒவ்வொரு fileஐயும் நாம் விடியோ ப்ளேயரில் திறக்க வேண்டும். அதில் பலவிதமான fileகள் இருக்கும். நாம் ஒவ்வொன்றாக திறந்து நாம் பார்க்க வேண்டிய அந்த படத்தை பார்ப்பதற்குள் நேரம் ஆகிவிடும். சில fileகள் ஒழுங்காக காப்பி ஆகியிருக்காது. சில டிவிடிக்கள் காப்பி ஆக மறுக்கும்.