Skip to main content

இலவச லேப்டாப்



ஒரு மாதத்திற்கு முன்பாக சொல்வேண்டிய ஒரு விஷயம். சிறிது காரணத்தால் தாமதமாகிவிட்டது. தமிழ்நாட்டில் பல மாணவர்களுக்கு இலவச லேப்டாப் கிடைத்திருக்கலாம். அதில் நானும் ஒருவன். கல்லூரியில் படிக்கும் எங்களுக்கும் கிடைத்தது மிக்க மகிழ்ச்சி. எங்களுக்கு கிடைத்தது லெனேவோ மாடல். 2 gb ram, pentium dual-core processor, 320 harddisk கொண்ட மடிக்கணினி. இதில் டிஸ்க் டிரைவ், web-cam, wi-fi போன்ற அதிக முக்கியத்துவமில்லாத எதுவுமில்லை.


 விண்டோஸ் 7ம், boss லினக்ஸ்ம் அவர்களே போட்டு தந்துள்ளனர். bossக்கு பதிலாக அதிக community support உள்ள உபுண்டு, fedora போன்ற எதாவது போட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும். boss லினக்ஸ்ம் debian அடிப்படையாக கொண்டு C-DACஆல் தயாரிக்கப்பட்டது. 2010ல் தயாரித்த ரிலீஸினை தந்துள்ளனர்.
பல அப்ளிக்கேஷன்களை அவர்களே நிறுவி தந்துள்ளனர். restricted-extrasனை தனியாக நிறுவ தேவையில்லை. பாட்டு, படம் எல்லாம் எந்த பிரச்சினையும் இல்லாமல் vlcயில் பார்க்க முடிகிறது

 ஜாவா, wine1.2, anjuta ide போன்றவறையும் நிறுவியுள்ளனர். இணைய வசதிகளில் iceweasel எனும் firefox fork பிரவிசரை கொடுத்துள்ளனர். அதே போல icedove மின்னஞ்சல்-களுக்காக கொடுத்துள்ளனர்.

 புதிதாக குனூ/லினக்ஸ் பயன்படுத்துபவர்கள் இதனை தாரளமாக பயன்படுத்தலாம். உபுண்டு பயன்படுத்த நிணைப்பவர்கள் அதனை விண்டோஸில் ஒரு அப்ளிக்கேஷனாக நிறுவி பயன்படுத்துங்கள்.

 மேலும் boss linuxல் நேரும் அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். உங்களுக்கு எதாவது தேவை என்றாலும் தயங்காமல் கூறவும். நாம் கண்டிப்பாக அதனை தீர்க்க முயற்சி செய்யலாம்.

 இன்னுமொரு சந்தோஷமான செய்தி  இன்று fedora 17 release ஆகிவிட்டது. இதன் கோட் நேம் Beefy Miracle. இதனை http://fedoraproject.org/ சென்று தரவிறக்கிகொள்ளுங்கள்.
சுதந்திரத்தை கொண்டாடுங்கள்.

Comments

Post a Comment

Popular posts from this blog

ரிதம்பாக்ஸில் ரேடியோ மிர்ச்சி

உபுண்டு 12.04ல் bansheeயை தூக்கிவிட்டு மறுபடியும் rhythmbox default இசைப்பானாக இடம்பெற்றுள்ளது. ரிதம்பாக்ஸ்ல் bansheeயை விட பல அம்சங்கள் குறைவுதான். ஏன் banshee ஐ எடுத்தார்கள் என்று  சரியாக புரியவில்லை. என்னதான் high-bitrateல் பாடல்கள் இருந்தாலும் fm கேட்பது ஒரு மகிழ்ச்சிதான். சில வருடங்களுக்கு முன்பு எங்கள் தெருக்களில் சூரியன் fm, ரேடியோ மிர்ச்சி போன்றவை தான் என்னை எழுப்பும்.

உபுண்டு டெர்மினலில் இருந்து இலவசமாக sms அனுப்பலாம்

இன்று டெர்மினலில் இருந்து எப்படி இலவசமாக sms அனுப்புவது என்று பார்க்கலாம். way2sms சென்று sms அனுப்புவதற்கு அந்த தளத்தின் விளம்பரங்களை தாண்டிதான் அனுப்ப வேண்டியிருக்கிறது. விளம்பரங்களை பார்க்கமால் சுலபமாக இந்த script ஐ பயன்படுத்தி இலவசமாக sms அனுப்பலாம். இதற்கு முதலில் way2sms ன் பயனராக இருக்க வேண்டும். இல்லை என்றால way2sms.com சென்று ஒரு அக்கவுண்டினை தொடங்கிகொள்ளவும். username, password  வேண்டும்.

விண்டோஸை விட லினக்ஸ் சிறந்தது: பத்து காரணங்கள்

லினக்ஸ் பயன்படுத்த கடினம், விண்டோஸே சிறந்தது என கருதுபவர்களுக்காக 1. வைரஸ் அபாயம் கிடையாது: ஆம். பொரும்பாலான வைரஸ் நிரல்கள் விண்டோஸிற்காக எழுதப்படுபவை. லினக்ஸால் win32  நிரல்களை  செயல்படுத்த முடியாது. எனவே வைரஸ் வரும் என்ற கவலை வேண்டாம். 2. திற-மூலமென்பொருள் - விண்டோஸ் போல் அல்லாமல் லினக்ஸ் ஆனது திற-மூல-இயங்குதளம்(open-source).  எனவே நம்முடைய தேவைக்கு ஏற்ப நாம் இதனை மாற்றவே, பிறருக்கு அளிக்கவோ முழு சுதந்திரம் உண்டு.