Skip to main content

சென்னை வருகிறார் ஒபன் சோர்ஸின் தந்தை Richard M Stallman


INTERNATIONAL 
SEMINAR
BY
DR. RICHARD STALLMAN


இலவச மென்பொருள் எனும் கருத்து 1980ம் ஆண்டு கணினி ஆராய்ச்சியாளரான ரிச்சர்டு எம். ஸ்டால்மென் என்பவரால் தொடங்கப்பட்ட குனூ எனும் திட்டத்தின் விளைவாகும். குனூ என்பது மற்ற வணிகம் சார்ந்த மென்பொருட்களுக்கு ஒரு மாற்றாக இருந்தது. குனு என்பது "GNU is Not Unix" என்பதின் விரிவுச்சொல்லாகும். இது ஒரு முற்றிலும் இலவசமான இயங்கு தளத்தை உருவாக்குவதற்காக தோன்றிய ஒரு யோசனை.
இங்கு இலவசம் எனும் வார்த்தை கவணிக்கத்தக்கது. இலவசம் எனும் சொல் மொன்பொருளின் விலையை குறிப்பது அல்ல. இலவசம் எனும் சொல் அதையும் தாண்டி அதன் சுதந்த்திரத்தன்மையை குறிக்கிறது. அதன் சுதந்திரத்தன்மை பின்வரும் பாங்கில் பொருந்துகிறது.

1. பயனர் மென்பொருளை எந்த உபயோகத்திற்கும் பயன்படுத்தும் சுதந்திரம்.

2. பயனர் தன் தேவைக்கு ஏற்றார் போல மென்பொருளை மாற்றிக்கொள்வதற்கான சுதந்திரம்.
3. பயனர் மென்பொருளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுவதற்கான சுதந்திரம்.(இலவசமாகவோ அல்லது சிறு தொகைக்காகவோ)
4. பயனர் தான் மாற்றி அமைத்த மென்பொருளை மற்றவர்களுடன் பகிர முழு சுதந்த்திரம் இதனால் அதன் குழுமத்தை சார்ந்த்தவர்கள் அதனை மேலும் மேம்படுத்தி பயன் பெற முடியும்.

கடந்த 20ஆண்டுகளாக இந்த இலவச மென்பொருளானது மற்ற வணிக ரீதியான மென்பொருட்களுக்கு ஒரு சக்திவாய்ந்த ஒரு மாற்றாக உள்ளது. இது பயனரின் உரிமையை மதிக்கிறது.

ரிச்சர்டு எம் ஸ்டால்மன்

ரிச்சர்டு ஸ்டால்மன் குனூ எனும் குழுமத்தின் தந்தை ஆவார். முழுவதும் வணிக ரீதியான மென்பொருட்களுக்கு ஒரு மாற்று தொழில்நுட்பம் கொண்ட ஒரு உலகை படைப்பதில் ஆவல் கொண்டவர் ஆவர். அவருடைய 'copy left' எனும் யோசனை மென்பொருள் உலகில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியது எனலாம்.

டாக்டர் ஸ்டால்மன் உலகில் பல இடங்களுக்கு சென்று பல உரைகளை ஆற்றிவருகிறார் சென்னையில் அவர் 'இலவச மென்பொருள், சுதந்திரம் மற்றும் கல்வி' பற்றி உரையாற்ற உள்ளார். எவ்வாறு இலவச மென்பொருள் ஆனது நம்முடைய கல்வி முறையில் முக்கிய பங்கினை வகிக்கிறது மேலும் ஆசிரியர்களும், மாணவர்களும் இலவச மென்பொருள் விரும்பிகளும் எவ்வாறு இந்த மென்பொருள் சுதந்திரத்தை உலகுக்கு வழங்க தமது பங்களிப்பை அளிப்பது பற்றி கூற உள்ளார்.

இலவச மென்பொருள் குழுமம், தமிழ் நாடு (Free Software Foundation, Tamil Nadu)

இந்த குழுமம் ஆனது Free Software Movement of India (FSMI)ன் ஒரு பகுதியாகும். இது இலவச மென்பொருட்கள் பற்றிய விழிப்புணர்வையும், அவற்றின் தேவையையும் பற்றி மக்களிடைய பரப்பி வருகிறது.

மாநிலத்தின் பல்வேறு கல்லூரிகளில் workshopகளை மேற்கொள்வது, GLUGS(Gnu/Linux Users' Group)எனும் குனு/லினக்ஸ் பயனாளர் குழுமம் ஏற்படுத்துதல் மற்றும் அதனை வழி நடத்துதல், மேலும் மாணவர்களிடைய கணினி பற்றிய அடிப்படை அறிவை குழுமங்கள் மூலம் வளர்த்தல் போன்ற பல சேவைகளை செய்து வருகிறது.

நாம் எவ்வாறு இதற்கு பங்களிப்பது?

1) நீங்கள் வார இறுதிகளில் சிறுவர்களுக்கு இதனை பற்றி கற்றுதருவதற்கான பங்களிக்கலாம்.
2) நீங்கள் தொழில் நுட்ப வல்லுனர் என்றால் பல்வேறு கல்லூரிகளில் நடக்கும் கருத்தரங்குகளில் பங்களிக்கலாம்.
3) மேலும் நீங்களே உங்கள் கல்லூரியில் GLUG அல்லது தொழில்நுட்ப கருத்தரங்குகளை பொருப்பேற்று நடத்தலாம்.

தொடர்புகொள்ள: ask@fsftn.org

இடம்:

Venue: Student Activity Center
(SAC), IIT - Madras
Date: February 6th 2012,
Time: 1pm - 4pm
Contact: ask@fsftn.org
Mobile: 9962240050

Comments

Popular posts from this blog

கட்டற்றமென்பொருள் பற்றிய மாத மின்இதழ்

உலகெங்கிலும் உள்ள தமிழ் மக்களுக்கு கணினிதொழில்நுட்பத்தை பற்றி அறிமுகம் செய்யும் கணியம் என்ற புதிய மாத மின்னிதழை வெளியிடுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். கணினி கற்க ஆங்கிலம் தடையாக இருந்த காலம் மாறி தொழில்னுட்பங்கள் யாவும் தமிழில் பெருகும் இந்த காலத்தில் மென்பொருள் பற்றிய நுட்பங்களை தமிழில் வழங்குவதில் பெருமை கொள்கிறோம். இந்த இதழின் கட்டுரைகள் : கட்டற்ற மென்பொருள் லினக்ஸ் பயனர் குழு – ஓர் அறிமுகம் உபுண்டு நிறுவுதல்

படங்களை 700mbயில் தரமாக உருமாற்றம் செய்ய

நம்மிடம் இருக்கும் டிவிடிபடங்களில் பிடித்தவற்றை அவ்வப்போது பார்த்துக்கொள்ள நாம் அவற்றை தனியாகவோ அல்லது, இமேஜாகவோ காபி செய்து வைத்துக்கொள்வோம். அவை அதிக இடத்தை பிடித்துக்கொள்ளும் ஒவ்வொன்றும் படத்திற்கேற்ற மாதிரி 2 முதல் 4 ஜிபி வரை கொள்ளளவு கொண்டிருக்கும். எனவே நாம் அவற்றை அதன் அளவில் குறைத்து அதனை வேறு உருமாட்டில் சேமித்து வைத்துக்கொள்ள விரும்புவோம். அவ்வாறு அதனை மாற்றுவதால் நம்முடைய கணினியின் இடம் மிச்சமாகிறது, மேலும் எளிதாக அவற்றை நம் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். அளவில் குறைவாக இருப்பதால் இணையத்திலும் அவற்றை ஏற்றி அதனை மற்றவர்களுடன் எளிதாக பகிர்ந்துகொள்ளலாம். ஆனால் இதில் இருக்கும் ஒரு குறைபாடு அதன் தரம். அதில் மாற்றத்தை நன்றாக பார்க்கமுடியும். சில மாற்றப்பட்ட வீடியோக்கள் தரம் குறைவாக இருக்கும். வீடியோ கன்வர்ட்டர்களை பயன்படுத்தும் பலருக்கு இது நன்கு தெரிந்திருக்கும். இணையங்களில் டோரண்ட்களை பயன்படுத்தி படம் இறக்குபவர்க்கள் 700mb களில் தரமான படங்கள் இருப்பதை பார்த்திருக்கலாம். நாம் எவ்வாறு இதுபோன்று தரமாக வீடியோக்களை மாற்றுவது என்று பார்ப்போம்.

சிடி/டிவிடிகளை காப்பி செய்யாதீர்கள்.

நாம் பொதுவாக டிவிடி படங்களை நம்முடைய கணினிகளில் டிவிடி டிரைவ்களில் போட்டு பார்ப்பது பழக்கம். நாம் நண்பர்களிடம் இருந்தோ அல்லது வேறுயாரிடமாவது இருந்தோ படங்களை வாங்கி உடனே பார்த்துவிட்டு தருவதற்கு முடியவில்லை என்றால் நாம் படங்களை காப்பி செய்து அதனை நம் கணினீயில் சேமிப்போம். அவ்வாறு சேமித்த படங்களை டிவிடி டிரைவில் போட்டு பார்ப்பது போன்றே சௌகரியமாக பார்ப்பது என்பது இயலாது. ஒவ்வொரு fileஐயும் நாம் விடியோ ப்ளேயரில் திறக்க வேண்டும். அதில் பலவிதமான fileகள் இருக்கும். நாம் ஒவ்வொன்றாக திறந்து நாம் பார்க்க வேண்டிய அந்த படத்தை பார்ப்பதற்குள் நேரம் ஆகிவிடும். சில fileகள் ஒழுங்காக காப்பி ஆகியிருக்காது. சில டிவிடிக்கள் காப்பி ஆக மறுக்கும்.