Skip to main content

உபுண்டு பயனாளர் தினம் ஜனவரி14-15


உபுண்டு பயனாளர் தினம் என்பது உபுண்டுவின் புதிய பயனாளிகளுக்கோ அல்லது  நடுத்தரமான பயனாளிகளுக்கோ ஒரு நாளில் சில வகுப்புகள் அமைத்து அவர்களுக்கு உபுண்டு பற்றிய அடிப்படை மற்றும் உபுண்டுவுடன் எவ்வாறு தொடங்குவது பற்றி கற்றுத்தறும் ஒரு நிகழ்ச்சி.
இது ஒரு தொடர்ச்சியான இணைய வழி சந்திப்பு.(IRC chat)
இதில் நீங்கள்
  • உபுண்டுவை எவ்வாறு நிறுவுவது.
  • விண்டோஸிற்கு இணையான உபுண்டு மென்பொருட்கள்
  • எவ்வாறு உதவிகளை பெறுவது
  • உபுண்டுவை பயன்படுத்த தேவையான அடிப்படைகள்
  • மேலும் உபுண்டு கம்யூனிட்டியுடன் நாம் எவ்வாறு பங்களிப்பது
போன்ற பல விஷயங்கள் பேசப்படும்.

இதில் நீங்களும் பங்கேற்கலாம், உங்கள் கேள்விகளை கேட்டு உங்கள் சந்தேகங்களை
தீர்த்துகொள்ளலாம்.
இது முழுவது IRC(Internet Relay Chat)  நடைபெறும்.

இது பற்றி மேலும் விபரம் அறிய  https://wiki.ubuntu.com/UserDays செல்லவும்.

லினக்ஸ், ஒபன் சோர்ஸ் போன்றவற்றில்  இந்தியர்கள், முக்கியமாக தமிழர்களின் பங்கு மிகவும் குறைவாகதான் உள்ளது.

இந்தியாவின் நிலை பற்றி லினக்ஸின் தந்தையான லினஸ் டோர்வல்ட்ஸின் கருத்தை இங்கு படியுங்கள் http://www.muktware.com/news/2855

இந்த புது வருடத்தில்  நாம் இந்த முயற்ச்சியை எடுப்போம். இந்த நிலையை மாற்றிக்காட்டுவோம்.

அணைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்க்ள்.!!!



Comments

Popular posts from this blog

ரிதம்பாக்ஸில் ரேடியோ மிர்ச்சி

உபுண்டு 12.04ல் bansheeயை தூக்கிவிட்டு மறுபடியும் rhythmbox default இசைப்பானாக இடம்பெற்றுள்ளது. ரிதம்பாக்ஸ்ல் bansheeயை விட பல அம்சங்கள் குறைவுதான். ஏன் banshee ஐ எடுத்தார்கள் என்று  சரியாக புரியவில்லை. என்னதான் high-bitrateல் பாடல்கள் இருந்தாலும் fm கேட்பது ஒரு மகிழ்ச்சிதான். சில வருடங்களுக்கு முன்பு எங்கள் தெருக்களில் சூரியன் fm, ரேடியோ மிர்ச்சி போன்றவை தான் என்னை எழுப்பும்.

உபுண்டு டெர்மினலில் இருந்து இலவசமாக sms அனுப்பலாம்

இன்று டெர்மினலில் இருந்து எப்படி இலவசமாக sms அனுப்புவது என்று பார்க்கலாம். way2sms சென்று sms அனுப்புவதற்கு அந்த தளத்தின் விளம்பரங்களை தாண்டிதான் அனுப்ப வேண்டியிருக்கிறது. விளம்பரங்களை பார்க்கமால் சுலபமாக இந்த script ஐ பயன்படுத்தி இலவசமாக sms அனுப்பலாம். இதற்கு முதலில் way2sms ன் பயனராக இருக்க வேண்டும். இல்லை என்றால way2sms.com சென்று ஒரு அக்கவுண்டினை தொடங்கிகொள்ளவும். username, password  வேண்டும்.

விண்டோஸை விட லினக்ஸ் சிறந்தது: பத்து காரணங்கள்

லினக்ஸ் பயன்படுத்த கடினம், விண்டோஸே சிறந்தது என கருதுபவர்களுக்காக 1. வைரஸ் அபாயம் கிடையாது: ஆம். பொரும்பாலான வைரஸ் நிரல்கள் விண்டோஸிற்காக எழுதப்படுபவை. லினக்ஸால் win32  நிரல்களை  செயல்படுத்த முடியாது. எனவே வைரஸ் வரும் என்ற கவலை வேண்டாம். 2. திற-மூலமென்பொருள் - விண்டோஸ் போல் அல்லாமல் லினக்ஸ் ஆனது திற-மூல-இயங்குதளம்(open-source).  எனவே நம்முடைய தேவைக்கு ஏற்ப நாம் இதனை மாற்றவே, பிறருக்கு அளிக்கவோ முழு சுதந்திரம் உண்டு.