பெரும்பாலனவர்களால் விரும்பி உபயோகப்படுத்தும் லினக்ஸின் டிஸ்ட்ரோக்களில் ஒன்றுதான் உபுண்டு. இதனை அதிகம் பேர் பயன்படுத்திவருகின்றனர். உபுண்டுவினை விண்டோஸினை போல நாம் நிறுவியதும் பாடல் மற்றும் வீடியோக்களை காணமுடியாது. அதற்கான கோடக்குகளை(codec) நிறுவினால் மட்டுமே நாம் அவற்றை செயல்படுத்த முடியும். அதற்கு இணைய இணைப்பு கண்டிப்பாக தேவை. புதிதாக இதனை உபயோகிப்பவர்கள் யாருக்கும் சிறிது குழுப்பம் ஏற்படும். ஆனால் சிறிது முயற்சி செய்தால் எளிதாக பழகிவிடலாம்..