Skip to main content

மொபைல்களுக்கான அசுர வேகம் கொண்ட உலவி biNu

இன்று நாம் பார்க்கப்போவது ஒரு மொபைலிற்கான மென்பொருள். இந்த மென்பொருளை நான் இன்று காலை தான் கெட்ஜார் தளத்தில் கண்டு உபயோகித்துதான் பார்ப்போமே என்று தரவிறக்கினேன். இதுவரை நான்
மொபைலுக்காக பயன்படுத்திய பயன்பாடுகளில் இது எனக்கு மிகவும் பிடித்தஒன்றாக மாறிவிட்டது. இதனை பற்றி நாம் விரிவாக பார்ப்போம். இதன் பெயர் biNu. இது ஒரு மொபைலிற்கான உலவிதான். ஆனால்
இது opera mini, ucbrowser, bolt போன்ற உலவிகளை காட்டிலும் மிகவும் வித்தியாசமானது.




இதன் முக்கியாமான அம்சம் இதன் அசுர வேகம் தான். ஏற்கனெவே சொன்னது போல் இது மற்ற உலவிகள் போல் அல்ல இதில் நாம் நம்முடைய இணையமுகவரியை தரமுடியாது. இருந்தாலும் நமக்கு பொதுவாக தேவைப்படும் அணைத்தும் இதில் முன்கூட்டியே தரப்பட்டிருக்கும். Facebook, Twitter, Wikipedia, news, sports ஆகியவற்றையும் மேலும் நம்ம ஊரின் weatherஐ அறியவும் இதில் வசதி உள்ளது. இது மற்றவற்றை விட பத்துமடங்கு வேகமானது என்று கூறுகின்றனர். மேலும் பல பயன்பாடுகளும் நாளுக்கு நாள்
இதில் சேர்க்கப்பட்டுவருகிறது.

இந்த உலவியானது தரவுகளை பரிமாற்றும் போது தகவலானது மிகவும் சுருக்கப்ப்ட்டு பரிமாறிக்கொள்வதால் வேகமாக நமக்கு தேவையான
செய்திகளை நாம் காணமுடியும். மேலும் குறைந்த அளவு தரவானது உபயோகப்ப்டுத்தப்படுவதால் பணமும் மிச்சமாகிறது. இதன் வேகத்தை நீங்கள் சாதாரண gprs வசதியுள்ள மொபைலில் கூட காணமுடியும். இதற்கு 3G தான் தேவை என்ற அவசியம் கிடையாது.

மேலும் முக்கியமாக இதில் மொழிப்பிரச்சினையே கிடையாது. எழுத்துகள் தெளிவாக நம் தாய்மொழியிலேயே அழகாக தெரியும். தமிழில் கூகுள் நியூஸ், தினகரன், தினமலர் மற்றும் பலவற்றை இதில் படிக்கமுடிகிறது. இது மற்ற மொழிகளை கூட ஆதரிக்கிறது.

இதில் எனக்கு மிகவும் பிடித்த மற்றொரு வசதி இலவசமாக smsகளை நம் நண்பர்களுக்கு அனுப்பமுடியும். இதில் account ஆரம்பிப்பது. மிக மிக சுலபம். உங்களுக்கான பயனர் பெயர் மற்றும் உங்கள் மொபைல் எண் அதனை கொடுத்தால் போதும். நமக்கு உடனே ஒரு பாஸ்கோட் அனுப்புவார்கள். அதனை biNuவில் தந்தால் போதும். நீங்கள் smsகளை அனுப்பலாம்.

இது முற்றிலும் இலவசமான் ஒன்று. அணைத்து மொபைல்களிலும் இருக்க வேண்டிய பயன்பாடு. இதனை தரவிறக்க உங்கள் மொபைலில் m.binu.com செல்லவும்.

அல்லது இதனை பற்றி மேலும் அறிய www.binu.com செல்லவும். நீங்கள் இங்கு சென்றும் தரவிறக்கிக்கொள்ளலாம்.

பைனு(biNu) பற்றிய இந்த வீடியோவை  பாருங்கள். நீங்களே புரிந்துகொள்வீர்கள்..!

Comments

  1. அருமையான வசதி. முயற்சி செய்து பார்க்கிறேன்.

    ReplyDelete
  2. கருத்துக்கு நன்றி...

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

ரிதம்பாக்ஸில் ரேடியோ மிர்ச்சி

உபுண்டு 12.04ல் bansheeயை தூக்கிவிட்டு மறுபடியும் rhythmbox default இசைப்பானாக இடம்பெற்றுள்ளது. ரிதம்பாக்ஸ்ல் bansheeயை விட பல அம்சங்கள் குறைவுதான். ஏன் banshee ஐ எடுத்தார்கள் என்று  சரியாக புரியவில்லை. என்னதான் high-bitrateல் பாடல்கள் இருந்தாலும் fm கேட்பது ஒரு மகிழ்ச்சிதான். சில வருடங்களுக்கு முன்பு எங்கள் தெருக்களில் சூரியன் fm, ரேடியோ மிர்ச்சி போன்றவை தான் என்னை எழுப்பும்.

உபுண்டு டெர்மினலில் இருந்து இலவசமாக sms அனுப்பலாம்

இன்று டெர்மினலில் இருந்து எப்படி இலவசமாக sms அனுப்புவது என்று பார்க்கலாம். way2sms சென்று sms அனுப்புவதற்கு அந்த தளத்தின் விளம்பரங்களை தாண்டிதான் அனுப்ப வேண்டியிருக்கிறது. விளம்பரங்களை பார்க்கமால் சுலபமாக இந்த script ஐ பயன்படுத்தி இலவசமாக sms அனுப்பலாம். இதற்கு முதலில் way2sms ன் பயனராக இருக்க வேண்டும். இல்லை என்றால way2sms.com சென்று ஒரு அக்கவுண்டினை தொடங்கிகொள்ளவும். username, password  வேண்டும்.

விண்டோஸை விட லினக்ஸ் சிறந்தது: பத்து காரணங்கள்

லினக்ஸ் பயன்படுத்த கடினம், விண்டோஸே சிறந்தது என கருதுபவர்களுக்காக 1. வைரஸ் அபாயம் கிடையாது: ஆம். பொரும்பாலான வைரஸ் நிரல்கள் விண்டோஸிற்காக எழுதப்படுபவை. லினக்ஸால் win32  நிரல்களை  செயல்படுத்த முடியாது. எனவே வைரஸ் வரும் என்ற கவலை வேண்டாம். 2. திற-மூலமென்பொருள் - விண்டோஸ் போல் அல்லாமல் லினக்ஸ் ஆனது திற-மூல-இயங்குதளம்(open-source).  எனவே நம்முடைய தேவைக்கு ஏற்ப நாம் இதனை மாற்றவே, பிறருக்கு அளிக்கவோ முழு சுதந்திரம் உண்டு.