கணினியில் கற்பது என்பது தற்போது பரவலாகிக்கொண்டிருக்கிறது. அதிகமாக படிப்பவர்கள் பி.டி.எஃப் எனப்படும் கோப்புகளை அறியாமல் இருக்கமாட்டார்கள். இந்த ஃபார்மட்டில் இருக்கும் புத்தகங்களை நாம் அடோபியின் அக்ரோபட் ரீடர் மூலமாக திறந்து படிப்போம். இந்த அக்ரோபட் ரீடர் சிலருக்கு பிடித்திருக்கும், சிலர் இதற்கு மாற்றினை தேடுவர். பெரும்பாலும் இது திறப்பதற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். அதற்கு காரணம் அது தன்னிடம் உள்ள அணைத்து பிளக்-இன் களையும் தன்னோடு
சேர்த்தே தொடங்கவைக்கிறது. இதற்கு மாற்று என்னவென்று கேட்டால் கண்டிப்பாக foxit ரீடர்தான். இது பிடிஎஃப் கோப்புகளை மிக வேகமாக திறக்கிறது. இதில் நம்க்கு தேவையான வரிகளை highlight செய்து
கொள்ளலாம். அர்த்தம் தெரியாத வார்த்தைகளை தெர்வு செய்து உடனே
இணையத்தில் அதற்கான பொருளை அறியலாம். மேலும் பல வசதிகள் உள்ள இது நான் உபயோகிக்கும் ஒரு இன்றியமையாத மென்பொருள்.
இதனை என்னைப்போல் பலர் பயன்படுத்திக்கொண்டிருக்களாம். ஆனாலும் புதியவர்கள் முக்கியமாக படிப்பவர்களுக்கு இது மிகவும் தேவையான மென்பொருள். இன்று இதனை பயன்படுத்தி படித்துக்கொண்டிருக்கும் போது இதில் இருக்கும் ஒரு வசதியினை அறிந்து கொண்டேன். அதனை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன். இந்த மென்பொருளை முதலில் உங்கள் கணினியில் தரவிறக்கி பதிந்துகொள்ளுங்கள்.
இணையமுகவரி: http://www.foxitsoftware.com/downloads/
இதனை உங்கள் கணினியில் நிறுவிய பின்பு Tools->Preferences சென்று அங்கு Internet என்பதை தேர்வு செய்யவும். அங்குள்ள Web Browser Options ல் Display PDF in Beowser என்பதை டிக் செய்யவும்.
அவ்வளவுதான்
இனிமேல் pdfகளை நீங்கள் firefox, chrome. opera, i-explorer போன்ற எந்த உலவியிலும் திறந்து படிக்கமுடியும். இனி pdf கோப்புகளை படிக்க ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக பிளக்-இன் களை நிறுவிக்கொண்டிருக்க தேவையில்லை.
உங்களுக்கு பிடித்திருந்தால் மறக்காமல் ஓட்டுகளையும் கமெண்ட்களையும் போடவும்.
தெரிந்துகொள்ளுங்கள்:
Intel Corporation
தொடங்கப்பட்டது: Mountain View, California(US) 1968ம் ஆண்டு,
நிறுவியவர்கள்: Gordon E. Moore மற்றும் Robert Noyce
தலைமையகம்: Santa Clara, California, U.S.
AMD (Advanced Micro Devices) Inc.
தொடங்கப்பட்டது: May 1, 1969
நிறுவியவர்கள்: W. Jerry Sanders III மற்றும் Edwin J. Turney
தலைமையகம்: Sunnyvale, California, U.S.

migka nanri!
ReplyDeleteஉங்களின் வலைப்பூ நன்றாக உள்ளது.. வாழ்த்துக்கள்
ReplyDeletemihavum bayanulla thalam.thanks for your services.
ReplyDelete