Skip to main content

ரிதம்பாக்ஸில் ரேடியோ மிர்ச்சி

உபுண்டு 12.04ல் bansheeயை தூக்கிவிட்டு மறுபடியும் rhythmbox default இசைப்பானாக இடம்பெற்றுள்ளது. ரிதம்பாக்ஸ்ல் bansheeயை விட பல அம்சங்கள் குறைவுதான். ஏன் banshee ஐ எடுத்தார்கள் என்று  சரியாக புரியவில்லை.

என்னதான் high-bitrateல் பாடல்கள் இருந்தாலும் fm கேட்பது ஒரு மகிழ்ச்சிதான். சில வருடங்களுக்கு முன்பு எங்கள் தெருக்களில் சூரியன் fm, ரேடியோ மிர்ச்சி போன்றவை தான் என்னை எழுப்பும்.


சரி. ரிதம்பாக்ஸில் எவ்வாறு தமிழ் fmகளை கேட்பது என்று பார்ப்போம். கீழே சில fmகளின் streaming url கொடுத்துள்ளேன். அவற்றை ரிதம்பாக்ஸில் சேர்க்க வேண்டியதுதான்.

suryan fmhttp://50.7.231.30:8106/;stream.nsv
radio mirchihttp://50.7.231.30:8983/;stream.nsv
hello fmhttp://bitgravity.live.cdn.bitgravity.com/hellofm/live/feed02?noprefix
shyam fmmms://st.malargal.com/shyamradio



ரிதம்பாக்ஸினை திறந்து கொண்டு வலது பக்கத்தில் இருக்கும் radio என்பதை கிளிக் செய்யவும். இப்போது பக்கத்தில் உள்ள Add என்பதை கிளிக் செய்யவும்.


 இப்போது  மேலே உள்ள லிங்கினை காபி செய்து அதில் சேர்க்கவும். பிறகு add என்பதை கிளிக் செய்யவும்.


நாம் சேர்த்த லின்ங் unknownல் இருக்கும். அதனை right click செய்து genre tamil என்று மாற்றிக்கொள்ளவும். title ஐ radio mirchi என்று தரவும்.
இப்போது radioவில் tamil genreல் நமக்கு விருப்பமான ரேடியோக்கள் இருக்கும். அதனை
கிளிக் செய்து fmமினை கேட்கலாம்.

இந்த urlகளை window media player, vlc போன்ற எந்த பிளேயர்களிலும் ஸ்டீரிம் செய்யலாம். வேறு எதாவது fmகளின் streaming url வேண்டும் என்றால் commentல் கேட்கவும்.

Comments

  1. பயனுள்ள பதிவு.
    சென்னையில் ஒலிபரப்பும் அனைத்து FM-களையும்
    VLC-யில் கேட்கலாமா..?!

    ReplyDelete
    Replies
    1. நன்றி.
      அந்த fm onlineல் ஒலிபரப்பினால் கண்டிப்பாக கேட்கமுடியும்.

      Delete
  2. பயனுள்ள பதிவு நண்பனுக்கு நன்றி

    ReplyDelete
  3. நன்றி அன்பு, தனபாலன்

    ReplyDelete
  4. தோழா அசத்தி விட்டீர்கள் போங்கள். தஞ்சாவூர் மாவட்டதின் கடைக்கோடியில் இருக்கும் ஒரு கிராமத்தில் இருந்துக்கொண்டு சென்னையில் உள்ள அனைத்து FM களையும் கேட்க முடிகிறது.

    இணைய இணைப்பு 12 KB/Sec தான் கைப்பேசி மூலமாக Airtel GPRS , Buffering ஆகாமல் கேட்டு ரசிக்க முடிகிறது.

    பயனுள்ள பதிவு.

    ReplyDelete
  5. திருச்சியில் இருக்கும் FM களின் முகவரிகளை கொடுத்தால் இன்னும் பயனுள்ளதாக இருக்கும் . நான் பல்கலைக்கழகத்தில் படித்த பொழுது திருச்சியில் இருக்கும் FM அலைவரிசைகளை கேட்டு மகிழ்வேன்.

    கொடுத்தால் இன்னும் பயனுள்ளதாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. திருச்சி fmகள் onlineல் இருக்கிறதா என்று தேடிக்கொண்டிருக்கிறேன். கிடைத்தால் கண்டிப்பாக சொல்கிறேன்.

      Delete

Post a Comment

Popular posts from this blog

கட்டற்றமென்பொருள் பற்றிய மாத மின்இதழ்

உலகெங்கிலும் உள்ள தமிழ் மக்களுக்கு கணினிதொழில்நுட்பத்தை பற்றி அறிமுகம் செய்யும் கணியம் என்ற புதிய மாத மின்னிதழை வெளியிடுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். கணினி கற்க ஆங்கிலம் தடையாக இருந்த காலம் மாறி தொழில்னுட்பங்கள் யாவும் தமிழில் பெருகும் இந்த காலத்தில் மென்பொருள் பற்றிய நுட்பங்களை தமிழில் வழங்குவதில் பெருமை கொள்கிறோம். இந்த இதழின் கட்டுரைகள் : கட்டற்ற மென்பொருள் லினக்ஸ் பயனர் குழு – ஓர் அறிமுகம் உபுண்டு நிறுவுதல்

விண்டோஸை விட லினக்ஸ் சிறந்தது: பத்து காரணங்கள்

லினக்ஸ் பயன்படுத்த கடினம், விண்டோஸே சிறந்தது என கருதுபவர்களுக்காக 1. வைரஸ் அபாயம் கிடையாது: ஆம். பொரும்பாலான வைரஸ் நிரல்கள் விண்டோஸிற்காக எழுதப்படுபவை. லினக்ஸால் win32  நிரல்களை  செயல்படுத்த முடியாது. எனவே வைரஸ் வரும் என்ற கவலை வேண்டாம். 2. திற-மூலமென்பொருள் - விண்டோஸ் போல் அல்லாமல் லினக்ஸ் ஆனது திற-மூல-இயங்குதளம்(open-source).  எனவே நம்முடைய தேவைக்கு ஏற்ப நாம் இதனை மாற்றவே, பிறருக்கு அளிக்கவோ முழு சுதந்திரம் உண்டு.

ARP/RARP full simulation program

server.c #include "stdio.h" #include "stdlib.h" #include "string.h" #include "sys/types.h" #include "sys/socket.h" #include "arpa/inet.h" #include "netinet/in.h" #define SA struct sockaddr struct IPmac { char ip[100]; char mac[100]; }; int main() { int sockfd,len,i; struct sockaddr_in servaddr; char buff[30],temp[30],ip[30],mac[30];