Skip to main content

ஆஃப்லைனில் உள்ள உபுண்டுவினுள் ஆடியோ/வீடியோ கோடக்குகளை நிறுவ

பெரும்பாலனவர்களால் விரும்பி உபயோகப்படுத்தும் லினக்ஸின் டிஸ்ட்ரோக்களில் ஒன்றுதான் உபுண்டு. இதனை அதிகம் பேர் பயன்படுத்திவருகின்றனர். உபுண்டுவினை விண்டோஸினை போல நாம் நிறுவியதும் பாடல் மற்றும் வீடியோக்களை காணமுடியாது. அதற்கான கோடக்குகளை(codec) நிறுவினால் மட்டுமே நாம் அவற்றை செயல்படுத்த
முடியும். அதற்கு இணைய இணைப்பு கண்டிப்பாக தேவை. புதிதாக இதனை உபயோகிப்பவர்கள் யாருக்கும் சிறிது குழுப்பம் ஏற்படும். ஆனால் சிறிது முயற்சி செய்தால் எளிதாக பழகிவிடலாம்..




 நானும் உபுண்டுவிற்கு புதிதுதான். நான் எனது மொபைலினை கொண்டு விண்டோஸில் இணைய இணைப்பு ஏற்படுத்துவேன். ஆனால் எவ்வளவோ முயற்சித்தும் உபுண்டுவில் இணைய இணைப்பு ஏற்படுத்த முடியவில்லை. எனவே என்னால் ஆடியோ/வீடியோக்களுக்கான கோடக்குகளை நிறுவ முடியவில்லை. பிறகு சிறிது தேடலுக்கு பிறகு எவ்வாறு ஆஃப்லைனில் ஆடியோ/வீடியோ கோடக்குகளை உபுண்டுவில் நிறுவுவது என்று அறிந்து கொண்டேன். இணைய இணைப்பு இல்லாத அல்லது இணைப்பு ஏற்படுத்த முடியாதவற்களுக்கு இந்த பதிவு உதவும் என நம்புகிறேன்.

முதலில் இந்த பேக்கேஜ்களை இணைய இணைப்பு உள்ள கணினியில் இருந்து தரவிறக்கிக்கொள்ளுங்கள்.

Ubuntu Codecs Pack 10.04 - [Lucid Lynx]

Ubuntu Codecs Pack 10.10 - [Maverick Meerkat]

Ubuntu Codecs Pack 11.04 - [Natty Narwhal]

உங்களிடம் உள்ள பதிப்பிற்கேற்ற பேக்கேஜினை தரவிறக்கி அதனை offlineல் உள்ள உங்கள் உபுண்டுவில் எங்காவது சேமியுங்கள். பிறகு அதனை extract செய்யுங்கள். அல்லது டெர்மினலில்

tar -xzvf package.tar.gz (இங்கு package என்பது பேக்கேஜின் பெயர்)

என்று கொடுத்தவுடன் அது பிரித்தெடுக்கப்பட்டு இருக்கும். அதில் உள்ள readme என்ற ஃபைலினிள் இருப்பதை படித்து அதில் உள்ளவாறு  செய்யுங்கள் பிறகு அதில் இருக்கும் install.sh என்பதை இருமுறை கிளிக் செய்து டெர்மினலில் திறந்து கொள்ளவும் அல்லது டெர்மினலில் bash install.sh என்றே அடித்து இயக்கவும். பிறகு y என்று கொடுத்தால் கோடக்குகள் உங்கள் உபுண்டுவில் நிறுவப்பட்டுவிடும். அவ்வளவுதான் இனிமேல் mp3, flv என்ற எதனை வேண்டுமானாலும் நீங்கள் இயக்கலாம்.

லினக்ஸின் full circle magazineன் 49வது மின் புத்தகத்தை நேற்று வெளியிட்டுள்ளனர்

* Command and Conquer.
* How-To : Program in Python - Part 23, LibreOffice - Part 4, Ubuntu Development - Part 1, and Use Google In Thunderbird.
* Linux Lab - Swappiness Part Two.
* Review - Virtual Machines.
* Top 5 - Web Management Tools.
* NEW COLUMN! I Think - we pose a question and you, the readers, give your thoughts. This month: what do you think of Unity? plus: Ubuntu Games, My Story, and much much more!

போன்ற பகுதிகள் உள்ளன. இதனை இந்த தளத்திலிருந்து தரவிறக்கிக்கொள்ளுங்கள்.

http://fullcirclemagazine.org/issue-49/

புதிய லினக்ஸ் பயனாளர்கள் அந்த தளத்தில் சென்று உங்கள் ஈ-மெயில் முகவரியினை அளித்து சந்தாதாரர் ஆகிவிடுங்கள்.
அவர்கள் ஒவ்வொரு முறையும் புதிய புத்தகங்களை வெளியிடும் போது உங்களுக்கு தெரிவிப்பார்கள்.

Comments

  1. நன்றாக எழுதுகிறிர்கள். தொடர்ந்து எழுதுங்கள். உபுண்டு பற்றிய பகிர்விற்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. உங்களுடைய வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி...

    ReplyDelete
  3. உபுண்டு பற்றிய பயனுள்ள தகவலுக்கு நன்றிகள் சகோ.

    ReplyDelete
  4. நன்றி நிரூபன்..

    ReplyDelete
  5. இந்த பிரச்சனையே வேண்டாம்னுதான் லினக்ஸ் மின்ட் பயன்படுத்துங்கள் என்று சொல்கிறேன்.


    உபுன்டு எட்டு அடி - லினக்ஸ் மின்ட் பதினாறு அடி!!

    ReplyDelete
  6. i want kubundu 10.4 audio /video codec's.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

கட்டற்றமென்பொருள் பற்றிய மாத மின்இதழ்

உலகெங்கிலும் உள்ள தமிழ் மக்களுக்கு கணினிதொழில்நுட்பத்தை பற்றி அறிமுகம் செய்யும் கணியம் என்ற புதிய மாத மின்னிதழை வெளியிடுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். கணினி கற்க ஆங்கிலம் தடையாக இருந்த காலம் மாறி தொழில்னுட்பங்கள் யாவும் தமிழில் பெருகும் இந்த காலத்தில் மென்பொருள் பற்றிய நுட்பங்களை தமிழில் வழங்குவதில் பெருமை கொள்கிறோம். இந்த இதழின் கட்டுரைகள் : கட்டற்ற மென்பொருள் லினக்ஸ் பயனர் குழு – ஓர் அறிமுகம் உபுண்டு நிறுவுதல்

படங்களை 700mbயில் தரமாக உருமாற்றம் செய்ய

நம்மிடம் இருக்கும் டிவிடிபடங்களில் பிடித்தவற்றை அவ்வப்போது பார்த்துக்கொள்ள நாம் அவற்றை தனியாகவோ அல்லது, இமேஜாகவோ காபி செய்து வைத்துக்கொள்வோம். அவை அதிக இடத்தை பிடித்துக்கொள்ளும் ஒவ்வொன்றும் படத்திற்கேற்ற மாதிரி 2 முதல் 4 ஜிபி வரை கொள்ளளவு கொண்டிருக்கும். எனவே நாம் அவற்றை அதன் அளவில் குறைத்து அதனை வேறு உருமாட்டில் சேமித்து வைத்துக்கொள்ள விரும்புவோம். அவ்வாறு அதனை மாற்றுவதால் நம்முடைய கணினியின் இடம் மிச்சமாகிறது, மேலும் எளிதாக அவற்றை நம் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். அளவில் குறைவாக இருப்பதால் இணையத்திலும் அவற்றை ஏற்றி அதனை மற்றவர்களுடன் எளிதாக பகிர்ந்துகொள்ளலாம். ஆனால் இதில் இருக்கும் ஒரு குறைபாடு அதன் தரம். அதில் மாற்றத்தை நன்றாக பார்க்கமுடியும். சில மாற்றப்பட்ட வீடியோக்கள் தரம் குறைவாக இருக்கும். வீடியோ கன்வர்ட்டர்களை பயன்படுத்தும் பலருக்கு இது நன்கு தெரிந்திருக்கும். இணையங்களில் டோரண்ட்களை பயன்படுத்தி படம் இறக்குபவர்க்கள் 700mb களில் தரமான படங்கள் இருப்பதை பார்த்திருக்கலாம். நாம் எவ்வாறு இதுபோன்று தரமாக வீடியோக்களை மாற்றுவது என்று பார்ப்போம்.

சிடி/டிவிடிகளை காப்பி செய்யாதீர்கள்.

நாம் பொதுவாக டிவிடி படங்களை நம்முடைய கணினிகளில் டிவிடி டிரைவ்களில் போட்டு பார்ப்பது பழக்கம். நாம் நண்பர்களிடம் இருந்தோ அல்லது வேறுயாரிடமாவது இருந்தோ படங்களை வாங்கி உடனே பார்த்துவிட்டு தருவதற்கு முடியவில்லை என்றால் நாம் படங்களை காப்பி செய்து அதனை நம் கணினீயில் சேமிப்போம். அவ்வாறு சேமித்த படங்களை டிவிடி டிரைவில் போட்டு பார்ப்பது போன்றே சௌகரியமாக பார்ப்பது என்பது இயலாது. ஒவ்வொரு fileஐயும் நாம் விடியோ ப்ளேயரில் திறக்க வேண்டும். அதில் பலவிதமான fileகள் இருக்கும். நாம் ஒவ்வொன்றாக திறந்து நாம் பார்க்க வேண்டிய அந்த படத்தை பார்ப்பதற்குள் நேரம் ஆகிவிடும். சில fileகள் ஒழுங்காக காப்பி ஆகியிருக்காது. சில டிவிடிக்கள் காப்பி ஆக மறுக்கும்.