Skip to main content

அனைத்தையும் பிரித்து மேயும் யூனிவர்சல்-எக்ஸ்டிராக்டர்

நாம் பலரும் அறிமுகமாகும் பல மென்பொருட்களை தரவிறக்கி நம் கணினியில் நிறுவிக்கொள்வதோடு சரி. சில மென்பொருட்களை நாம் அதிகபட்சம் இரண்டு, மூன்று முறைதான் உபயோகித்திருப்போம். ஒரு குறிப்பிட்ட மென்பொருட்ளின் அனைத்து வசதிகளையும் நாம் அறிந்துவைத்திருப்பது அபூர்வமே. அது போன்று நாம் அறிந்தும் பயன்படுத்தாத ஒரு மென்பொருளின் அட்டகாசமான வசதியினை இன்று காணலாம்.



கம்பிரஸ்ஸன் மென்பொருட்கள் ஒவ்வொன்றும் தனக்கென்று தனி ஃபார்மட்களை உருவாக்கி அதனை பயன்படுத்தவைக்கின்றனர்.
உதாரணத்திற்கு winrarன் .rar ஃபார்மட் kgb archiverன் .kgb ஃபார்மட் ஆகியவற்றை கூறலாம். இவர்களால் உருவாக்கப்பட்ட இந்த ஃபார்மட்கள் அந்த்தந்த மென்பொருட்களின் துணையுடன் தான் திறக்க, கையாள முடியும். ஆகவே நாம் ஒவ்வொன்றிற்கும் தனித்தனியாக மென்பொருட்களை நிறுவிக்கொள்வது என்பது நேரத்தை வீணடிக்கும் செயல். எனவே universal extractor என்ற மென்பொருளை நிறுவிக்கொண்டால் எந்த ஒரு ஆர்ச்சிவ் ஃபார்மட்டையும் பிரித்துக்கொள்ளலாம். .uha, .arc, .zip, .rar .iso மற்றும் பல ஃபார்மட்களை இது ஆதரிக்கிறது. இது பலருக்கும் தெரிந்த்ததுதான். இது அனைவரிடமும் இருக்கவேண்டிய பயனுள்ள இலவச மென்பொருள்.

இதனை இங்கிருந்து தரவிறக்கி கொள்ளவும்.

universal extractor இனணையமுகவரி: uniextract

இதன் வசதிகள் உண்மையிலேயே உங்களை ஆச்சரியபடுத்தும். இதனை கொண்டு executable fileகளை கூட திறந்து என்ன இருக்கிறது என்று பார்க்கமுடியும்.

நான் சமீபத்தில் இணையத்திலிருந்து சில புத்தகங்கள் அடங்கிய ஒரு ஃபைலினை தரவிறக்கினேன். அது executable fileஆக இருந்ததது. மின்புத்தகங்கங்களை அந்த fileன் உள்ளே அடைக்கப்பட்டு இருந்தன. ஒவ்வொரு முறையும் எதேனும் ஒரு புத்தகத்தை படிக்க வேண்டும் என்றால் அதனை execute செய்துதான் அந்த புத்தகத்தை தேர்ந்தெடுத்து படிக்கவேண்டும் என்றவாறு அவை அமைக்கப்ப்ட்டிருந்த்தன. ஒவ்வொறு முறையும் அதனை execute செய்ய எனக்கு பிடிக்கவில்லை. மேலும் உபுண்டுவில் execute செய்ய முடியாது எனவே. இந்த executable fileன் உள்ளே மறைந்திருக்கும் புத்தகங்களை மட்டும் தனியாக பிரித்தெடுத்தால் நன்றாக இருக்கும் என தோன்றியது. அவ்வாறு பிரித்தெடுப்பதற்கு இந்த universal-extractor எனக்கு பயன்பட்டது.



executable fileன் மேலே வலது கிளிக் செய்து uniExtract here என்பதை கிளிக் செய்த பின்பு மூன்று தேர்வுகள் வரும் எனக்கு முதல் இரண்டு முறைகள் அந்த executable fileஇனை திறக்க மறுத்தது. ஆனால் மூன்றாவது எனக்கு கைகொடுத்தது. இது அந்த executable fileன் உள்ளே இருந்த அனைத்து ஃபைல்களையும் பிரித்து காட்டியது. எனக்கு தேவையான புத்தகங்கள் அனைத்தும் docs என்ற folderன் உள்ளே இருந்த்து. இது ஒவ்வொரு fileக்கும் மாறுபடும். universal-extractor கொண்டு பிரிக்க முடியுமே தவிர உருவாக்கமுடியாது.


kgb archiver உண்மையிலேயே ஒரு அதிசயம் தான். சில kgb fileகளை கூகிளில் தேடிப்பாருங்கள். 4 gb அளவுள்ள fileஇனை 1mb அளவிற்கு சுருக்குவது என்பது சாத்தியமா?. இந்த மென்பொருள் கொண்டு இதனை செய்வது சாத்தியம் தான். ஆனால் இதனை உருவாக்கவும், பிரிக்கவும் உங்கள் கணினிக்கு அதிக திறனும், நினைவகமும் இருக்கவேண்டும், அதிக நேரமும் பிடிக்கும்.

download kgb archiever: softpedia website

மறக்காமல் உங்கள் ஓட்டுக்களையும், கருத்துக்களையும் கூறுங்கள்.

Comments

Popular posts from this blog

கட்டற்றமென்பொருள் பற்றிய மாத மின்இதழ்

உலகெங்கிலும் உள்ள தமிழ் மக்களுக்கு கணினிதொழில்நுட்பத்தை பற்றி அறிமுகம் செய்யும் கணியம் என்ற புதிய மாத மின்னிதழை வெளியிடுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். கணினி கற்க ஆங்கிலம் தடையாக இருந்த காலம் மாறி தொழில்னுட்பங்கள் யாவும் தமிழில் பெருகும் இந்த காலத்தில் மென்பொருள் பற்றிய நுட்பங்களை தமிழில் வழங்குவதில் பெருமை கொள்கிறோம். இந்த இதழின் கட்டுரைகள் : கட்டற்ற மென்பொருள் லினக்ஸ் பயனர் குழு – ஓர் அறிமுகம் உபுண்டு நிறுவுதல்

படங்களை 700mbயில் தரமாக உருமாற்றம் செய்ய

நம்மிடம் இருக்கும் டிவிடிபடங்களில் பிடித்தவற்றை அவ்வப்போது பார்த்துக்கொள்ள நாம் அவற்றை தனியாகவோ அல்லது, இமேஜாகவோ காபி செய்து வைத்துக்கொள்வோம். அவை அதிக இடத்தை பிடித்துக்கொள்ளும் ஒவ்வொன்றும் படத்திற்கேற்ற மாதிரி 2 முதல் 4 ஜிபி வரை கொள்ளளவு கொண்டிருக்கும். எனவே நாம் அவற்றை அதன் அளவில் குறைத்து அதனை வேறு உருமாட்டில் சேமித்து வைத்துக்கொள்ள விரும்புவோம். அவ்வாறு அதனை மாற்றுவதால் நம்முடைய கணினியின் இடம் மிச்சமாகிறது, மேலும் எளிதாக அவற்றை நம் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். அளவில் குறைவாக இருப்பதால் இணையத்திலும் அவற்றை ஏற்றி அதனை மற்றவர்களுடன் எளிதாக பகிர்ந்துகொள்ளலாம். ஆனால் இதில் இருக்கும் ஒரு குறைபாடு அதன் தரம். அதில் மாற்றத்தை நன்றாக பார்க்கமுடியும். சில மாற்றப்பட்ட வீடியோக்கள் தரம் குறைவாக இருக்கும். வீடியோ கன்வர்ட்டர்களை பயன்படுத்தும் பலருக்கு இது நன்கு தெரிந்திருக்கும். இணையங்களில் டோரண்ட்களை பயன்படுத்தி படம் இறக்குபவர்க்கள் 700mb களில் தரமான படங்கள் இருப்பதை பார்த்திருக்கலாம். நாம் எவ்வாறு இதுபோன்று தரமாக வீடியோக்களை மாற்றுவது என்று பார்ப்போம்.

சிடி/டிவிடிகளை காப்பி செய்யாதீர்கள்.

நாம் பொதுவாக டிவிடி படங்களை நம்முடைய கணினிகளில் டிவிடி டிரைவ்களில் போட்டு பார்ப்பது பழக்கம். நாம் நண்பர்களிடம் இருந்தோ அல்லது வேறுயாரிடமாவது இருந்தோ படங்களை வாங்கி உடனே பார்த்துவிட்டு தருவதற்கு முடியவில்லை என்றால் நாம் படங்களை காப்பி செய்து அதனை நம் கணினீயில் சேமிப்போம். அவ்வாறு சேமித்த படங்களை டிவிடி டிரைவில் போட்டு பார்ப்பது போன்றே சௌகரியமாக பார்ப்பது என்பது இயலாது. ஒவ்வொரு fileஐயும் நாம் விடியோ ப்ளேயரில் திறக்க வேண்டும். அதில் பலவிதமான fileகள் இருக்கும். நாம் ஒவ்வொன்றாக திறந்து நாம் பார்க்க வேண்டிய அந்த படத்தை பார்ப்பதற்குள் நேரம் ஆகிவிடும். சில fileகள் ஒழுங்காக காப்பி ஆகியிருக்காது. சில டிவிடிக்கள் காப்பி ஆக மறுக்கும்.