Skip to main content

Posts

Showing posts from February, 2012

VLCன் புதிய பதிப்பு VLC 2.0 உபுண்டுவில் நிறுவ

VLC தனது புதிய பதிப்பான VLC 2.0 வை சில நாட்களுக்கு முன் வெளியிட்டார்கள். vlcன் புதிய வசதிகள். multi-threaded decoding new audio and video filters Blu-ray support improved MKV demuxer Broadcom CrystalHD hardware decoding minor changes in interface உபுண்டு 12.04 உபயோகிப்பவர்கள் நேரடியாக software centerல் இருந்து நிருவிக்கொள்ளலாம். உபுண்டு 11.10 உபயோகிப்பவர்கள் vlc 2.0 ஐ நிறுவ: டெர்மினைலை திறந்து கொண்டு கீழே உள்ளதை காபி செய்து போடவும்.   $ sudo add-apt-repository ppa:n-muench/vlc $ sudo apt-get update $ sudo apt-get install vlc   உபுண்டு 10.10 உபயோகிப்பவர்கள்:   $ sudo add-apt-repository ppa:lucid-bleed/ppa $ sudo apt-get update  $ sudo apt-get install vlc vlc-plugin-pulse mozilla-plugin-vlc  

லினக்ஸில் Internet Download Manager

எனக்கு விண்டோஸில் பிடித்த ஒரு மென்பொருள் Internet Download Manager. மிக வேகமாக fileகளையும், youtubeவீடியோக்களையும் downloadசெய்ய எனக்கு மிகவும் உதவியது. எனவே IDMஐ wine மூலம் எனது உபுண்டுவில் நிறுவி பார்த்தேன். ஆனால் வேலை செய்யவில்லை. googleல் சில தேடல்களுக்கு பிறகு வெற்றிகரமாக நிறுவிவிட்டேன். idmன் பழைய வெர்ஷனை கூகிளில் தேடி தரவிறக்கி கொள்ளவும். அது நன்றாக வேலை செய்கிறது.

சில உபயோகமான குனூ/லினக்ஸ் டெர்மினல் கட்டளைகள்

எனக்கு தெரிந்த சில கமாண்ட்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.  நம்முடைய எந்த குனூ/லினக்ஸ் ஆனாலும் இந்த கட்டளைகளை முயன்று பார்க்கலாம். நம்முடைய கணினியை shutdown செய்வதற்கு: $sudo poweroff $sudo halt $sudo init 0 $sudo shutdown -h now

திருத்தக் கட்டுப்பாடு(version control system) பற்றிய இலவச புத்தகம்

திருத்தக் கட்டுப்பாடு( version control system) பற்றி: திருத்தக் கட்டுப்பாடு என்பது ஒரே மூலத்துக்கு பல திருத்தங்களை மேற்கொள்ளவதை மேலாண்மை செய்வதாகும். இது பொறியியலிலும் மென்பொருள் ஆக்கத்திலும் முதன்மையாக பயன்படும் ஏற்பாடு ஆகும். குறிப்பாக ஒரு குழு சேர்ந்து ஒரு மூல ஆகக்த்தை ஆக்கும் பொழுது, ஒவ்வொருவரும் செய்யும் மாற்றங்களை நிகழ் நேரத்தில் மேலாண்மை செய்ய திருத்தக் கட்டுப்பாடு ஏதுவாக்கிறது. எடுத்துக் காட்டாக விக்கியில் ஒவ்வொரு பயனர்கள் ஒவ்வொரு பக்கத்தில் செய்யும் மாற்றங்களும் பதிவு செய்யப்படுகின்றன. திருத்தங்கள் சரியில்லை என்றால் விக்கியின் திருத்தக் கட்டுபாட்டு மென்பொருளால் முன்னைய நிலையை மீள் செய்து விடலாம். ஒரு கட்டுரையை ஒரே சமயத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட பயனர்கள் மாற்றினால் மென் பொருள் அதை பயனருக்கு அறிவிக்கும், ஏலுமென்றால் ஒன்றாக்கும். இந்த வெர்ஷன் கண்ட்ரோல் சிஸ்டம் பற்றி Eric Sink என்பவர் எழுதிய புத்தகத்தை இலவசமாக வீட்டிற்கே அனுப்பி வைக்கிறார்கள். மேலும் pdf புத்தகமாகவும் தரவிறக்கிகொள்ளலாம். கீழே உள்ள படத்தை கிளிக் செய்து request a free copy என்பதை கிளிக் செய்து பதிந்து...

இணைய சுரண்டல் (web scrapping) ரூபி ஸ்கிரிப்ட்டில்

நேற்று சென்ணை பல்கலைகழக தேர்வு முடிவுகள் வெளியானது. ஒவ்வொரு resultஐயும் தனித்தனியாக பார்க்க ரொம்ப நேரமாகும். எல்லாருடைய resultஐயும் ஒரே பக்கத்தில் பார்க்க இந்த script உதவியது. என் நண்பர் ராஜ்குமார் அண்ணா பல்கலைகழக தேர்வு முடிவுகளை எடுக்க இந்த scriptஐ எழுதினார். நான் இதை சிறிது மாற்றியுள்ளேன் (சென்னை பல்கலைக்கழகத்திற்காக). இதைக்கொண்டு html மற்றும் txt fileஆக output எடுக்க முடியும். அதற்கு முன் hpricot மற்றும் open-uri என்ற இரு gemகள் தேவை $sudo gem install hpricot open-uri கொடுத்து நிறுவிகொள்ளவும் # Fetch my class students exam result from University site # Progamme name scrabing_exam_results.rb # Author : Rajkumar.S # moded by: Manimaran G # version : 0.01 # License: GNU GPL 3 require 'rubygems' require 'open-uri' require 'hpricot' url = "http://schools9.com/mad0702.aspx?htno=" # exam_no is a range exam_no = "s900488".."s900517" exam_no.each do |each_number| doc=Hpricot(open(url+each_number)) data=doc.search('table...

இலவச லேப்டாப்' உண்மையில் இலவசம் இல்லை - ரிச்சர்டு ஸ்டால்மன்

நேற்று சென்னையில் 'இலவச மென்பொருள், சுதந்திரம் மற்றும் கல்வி' பற்றி திரு ரிச்சர்டு ஸ்டால்மன் உரையாற்றினார். தமிழ்நாட்டில் மாணவர்களுக்கு வழங்கவிருக்கும் இலவச மடிக்கணினிகளில் லினக்ஸ் (BOSS linux) மற்றும் விண்டோஸ் 7 starter இயங்குதளத்துடன் வழங்கப்படுகிறது. 'proprietary மென்பொருள்களுடன் வழங்கப்படும் இலவச லேப்டாப் உண்மையில் இலவசமாகாது' என்று கூறினார். மேலும் இலவச மென்பொருள்களுடன்  proprietary மென்பொருள்களை வழங்குவது மாணவர்களின் மதிய உணவிற்கு விஸ்கியுடன் தண்ணீர் வழங்குவது போன்றது. என்று கூறினார். அவர் கூறியது பற்றி மேலும் படிக்க  news in hindu paper நேற்று நான் எடுத்த சில படங்கள்.

கட்டற்ற மென்பொருள் பற்றிய இலவச இதழ் கணியம்-02

இன்று கணியம் இதழின் இரண்டாவது இதழ் வெளியிடப்பட்டுள்ளது. சென்ற முறையை விட  மிகவும் நன்றாக உள்ளது. புது புது விஷயங்கள். முக்கியமாக ரிச்சர்டு ஸ்டால்மனின் சென்னை வருகை அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. சென்ற முறையை விட பல புது நண்பர்கள் கட்டுரைகளை எழுதி பங்களித்துள்ளனர் என்பது மிகவும் மகிழ்ச்சியான செய்தி.

உபுண்டுவில் மென்பொருட்களை வேகமாக நிறுவ நிரல்

உபுண்டுவில் மென்பொருட்களை நிறுவ வேண்டும் என்றால் நாம் software center சென்று நிறுவுவோம். அப்பொது அதன் தரவிறங்கும் நேரம் சற்று அதிகமாகும். டெர்மினலில் apt-get மூலம் மென்பொருட்களை நிறுவினால் அது wget மூலம் பேக்கேஜ்களை தரவிறக்கி நம்முடைய கணினியில் நிறுவும். இதற்கு பதிலாக axel, prozilla, aria2c போன்ற download acceleratorகளை பயன்படுத்தி தரவிறக்கினோம் என்றால் இன்னும் சற்று அதிகமான வேகத்தில் தரவிறக்க முடியும். இந்த download acceleratorகள் parallel download எனும் முறையை பயன்படுத்து ஒரே fileஇனை பல்வேறு பகுதிகளாக பிரித்து தரவிறக்கி பிறகு சேர்க்கும் எனவே இவை சாதாரண டவுண்லோட் மேனேஜரை காட்டிலும் வேகமாக இருக்கும். இந்த script நம்முடைய apt-get