Skip to main content

திருத்தக் கட்டுப்பாடு(version control system) பற்றிய இலவச புத்தகம்

திருத்தக் கட்டுப்பாடு( version control system) பற்றி:
திருத்தக் கட்டுப்பாடு என்பது ஒரே மூலத்துக்கு பல திருத்தங்களை மேற்கொள்ளவதை மேலாண்மை செய்வதாகும். இது பொறியியலிலும் மென்பொருள் ஆக்கத்திலும் முதன்மையாக பயன்படும் ஏற்பாடு ஆகும். குறிப்பாக ஒரு குழு சேர்ந்து ஒரு மூல ஆகக்த்தை ஆக்கும் பொழுது, ஒவ்வொருவரும் செய்யும் மாற்றங்களை நிகழ் நேரத்தில் மேலாண்மை செய்ய திருத்தக் கட்டுப்பாடு ஏதுவாக்கிறது. எடுத்துக் காட்டாக விக்கியில் ஒவ்வொரு பயனர்கள் ஒவ்வொரு பக்கத்தில் செய்யும் மாற்றங்களும் பதிவு செய்யப்படுகின்றன. திருத்தங்கள் சரியில்லை என்றால் விக்கியின் திருத்தக் கட்டுபாட்டு மென்பொருளால் முன்னைய நிலையை மீள் செய்து விடலாம். ஒரு கட்டுரையை ஒரே சமயத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட பயனர்கள் மாற்றினால் மென் பொருள் அதை பயனருக்கு அறிவிக்கும், ஏலுமென்றால் ஒன்றாக்கும்.

இந்த வெர்ஷன் கண்ட்ரோல் சிஸ்டம் பற்றி Eric Sink என்பவர் எழுதிய புத்தகத்தை இலவசமாக வீட்டிற்கே அனுப்பி வைக்கிறார்கள். மேலும் pdf புத்தகமாகவும் தரவிறக்கிகொள்ளலாம்.
கீழே உள்ள படத்தை கிளிக் செய்து request a free copy என்பதை கிளிக் செய்து பதிந்து கொள்ளவும். இரண்டு வாரங்களுக்குள் புத்தகம் வந்து சேர்ந்து விடும்.



நன்றி:- விக்கிபீடியா

Comments

Popular posts from this blog

கட்டற்றமென்பொருள் பற்றிய மாத மின்இதழ்

உலகெங்கிலும் உள்ள தமிழ் மக்களுக்கு கணினிதொழில்நுட்பத்தை பற்றி அறிமுகம் செய்யும் கணியம் என்ற புதிய மாத மின்னிதழை வெளியிடுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். கணினி கற்க ஆங்கிலம் தடையாக இருந்த காலம் மாறி தொழில்னுட்பங்கள் யாவும் தமிழில் பெருகும் இந்த காலத்தில் மென்பொருள் பற்றிய நுட்பங்களை தமிழில் வழங்குவதில் பெருமை கொள்கிறோம். இந்த இதழின் கட்டுரைகள் : கட்டற்ற மென்பொருள் லினக்ஸ் பயனர் குழு – ஓர் அறிமுகம் உபுண்டு நிறுவுதல்

விண்டோஸை விட லினக்ஸ் சிறந்தது: பத்து காரணங்கள்

லினக்ஸ் பயன்படுத்த கடினம், விண்டோஸே சிறந்தது என கருதுபவர்களுக்காக 1. வைரஸ் அபாயம் கிடையாது: ஆம். பொரும்பாலான வைரஸ் நிரல்கள் விண்டோஸிற்காக எழுதப்படுபவை. லினக்ஸால் win32  நிரல்களை  செயல்படுத்த முடியாது. எனவே வைரஸ் வரும் என்ற கவலை வேண்டாம். 2. திற-மூலமென்பொருள் - விண்டோஸ் போல் அல்லாமல் லினக்ஸ் ஆனது திற-மூல-இயங்குதளம்(open-source).  எனவே நம்முடைய தேவைக்கு ஏற்ப நாம் இதனை மாற்றவே, பிறருக்கு அளிக்கவோ முழு சுதந்திரம் உண்டு.

சிடி/டிவிடிகளை காப்பி செய்யாதீர்கள்.

நாம் பொதுவாக டிவிடி படங்களை நம்முடைய கணினிகளில் டிவிடி டிரைவ்களில் போட்டு பார்ப்பது பழக்கம். நாம் நண்பர்களிடம் இருந்தோ அல்லது வேறுயாரிடமாவது இருந்தோ படங்களை வாங்கி உடனே பார்த்துவிட்டு தருவதற்கு முடியவில்லை என்றால் நாம் படங்களை காப்பி செய்து அதனை நம் கணினீயில் சேமிப்போம். அவ்வாறு சேமித்த படங்களை டிவிடி டிரைவில் போட்டு பார்ப்பது போன்றே சௌகரியமாக பார்ப்பது என்பது இயலாது. ஒவ்வொரு fileஐயும் நாம் விடியோ ப்ளேயரில் திறக்க வேண்டும். அதில் பலவிதமான fileகள் இருக்கும். நாம் ஒவ்வொன்றாக திறந்து நாம் பார்க்க வேண்டிய அந்த படத்தை பார்ப்பதற்குள் நேரம் ஆகிவிடும். சில fileகள் ஒழுங்காக காப்பி ஆகியிருக்காது. சில டிவிடிக்கள் காப்பி ஆக மறுக்கும்.