Skip to main content

Posts

Showing posts from January, 2012

சென்னை வருகிறார் ஒபன் சோர்ஸின் தந்தை Richard M Stallman

INTERNATIONAL  SEMINAR BY DR. RICHARD STALLMAN இலவச மென்பொருள் எனும் கருத்து 1980ம் ஆண்டு கணினி ஆராய்ச்சியாளரான ரிச்சர்டு எம். ஸ்டால்மென் என்பவரால் தொடங்கப்பட்ட குனூ எனும் திட்டத்தின் விளைவாகும். குனூ என்பது மற்ற வணிகம் சார்ந்த மென்பொருட்களுக்கு ஒரு மாற்றாக இருந்தது. குனு என்பது "GNU is Not Unix" என்பதின் விரிவுச்சொல்லாகும். இது ஒரு முற்றிலும் இலவசமான இயங்கு தளத்தை உருவாக்குவதற்காக தோன்றிய ஒரு யோசனை. இங்கு இலவசம் எனும் வார்த்தை கவணிக்கத்தக்கது. இலவசம் எனும் சொல் மொன்பொருளின் விலையை குறிப்பது அல்ல. இலவசம் எனும் சொல் அதையும் தாண்டி அதன் சுதந்த்திரத்தன்மையை குறிக்கிறது. அதன் சுதந்திரத்தன்மை பின்வரும் பாங்கில் பொருந்துகிறது. 1. பயனர் மென்பொருளை எந்த உபயோகத்திற்கும் பயன்படுத்தும் சுதந்திரம்.

உபுண்டு டெர்மினலில் இருந்து இலவசமாக sms அனுப்பலாம்

இன்று டெர்மினலில் இருந்து எப்படி இலவசமாக sms அனுப்புவது என்று பார்க்கலாம். way2sms சென்று sms அனுப்புவதற்கு அந்த தளத்தின் விளம்பரங்களை தாண்டிதான் அனுப்ப வேண்டியிருக்கிறது. விளம்பரங்களை பார்க்கமால் சுலபமாக இந்த script ஐ பயன்படுத்தி இலவசமாக sms அனுப்பலாம். இதற்கு முதலில் way2sms ன் பயனராக இருக்க வேண்டும். இல்லை என்றால way2sms.com சென்று ஒரு அக்கவுண்டினை தொடங்கிகொள்ளவும். username, password  வேண்டும்.

இலவச சதுரங்க விளையாட்டு

கல்லூரியில் போட்டிகள் நடைபெறப்போவதால் செஸ்ஸில் சேரலாமே என்று பேர் கொடுத்தேன். வீட்டில் செஸ் ப்ராக்டிஸ் செய்வதற்காக உபுண்டுவில் தேடினேன். விண்டோஸிற்கு பல செஸ் கேம்கள் கிடைத்தாலும் அது ஷேர்-வேர்களாகவே இருந்த்தன. எனவே உபுண்டு சாஃப்ட்வேர் சென்டரில் செஸ் விளையாட்டை தேடினேன். பல கேம்கள் வந்து குவிந்த்தன. அதில் pychess என்பதை  நிறுவிக்கொண்டேன். இதன் அளவு மிகவும் கம்மிதான். இரண்டு mbக்கு குறைவுதான். ஆனால் மிகவும் அருமையாக உள்ளது. ஆன்லைனில் மற்றவர்கள் கூடவும் விளையாடலாம். அதற்கான தனி சர்வரும் உண்டு.   இதனை உபுண்டுவில் நிறுவ சாஃப்ட்வேர் சென்டரில் pychess என்பதனை தேடி நிறுவவும். இல்லை எனில் டெர்மினலில் $ sudo apt-get install pychess என்று அடியுங்கள். உங்கள் கணினியில் நிறுவப்பட்டுவிடும்.

கட்டற்றமென்பொருள் பற்றிய மாத மின்இதழ்

உலகெங்கிலும் உள்ள தமிழ் மக்களுக்கு கணினிதொழில்நுட்பத்தை பற்றி அறிமுகம் செய்யும் கணியம் என்ற புதிய மாத மின்னிதழை வெளியிடுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். கணினி கற்க ஆங்கிலம் தடையாக இருந்த காலம் மாறி தொழில்னுட்பங்கள் யாவும் தமிழில் பெருகும் இந்த காலத்தில் மென்பொருள் பற்றிய நுட்பங்களை தமிழில் வழங்குவதில் பெருமை கொள்கிறோம். இந்த இதழின் கட்டுரைகள் : கட்டற்ற மென்பொருள் லினக்ஸ் பயனர் குழு – ஓர் அறிமுகம் உபுண்டு நிறுவுதல்

உபுண்டு பயனாளர் தினம் ஜனவரி14-15

உபுண்டு பயனாளர் தினம் என்பது உபுண்டுவின் புதிய பயனாளிகளுக்கோ அல்லது  நடுத்தரமான பயனாளிகளுக்கோ ஒரு நாளில் சில வகுப்புகள் அமைத்து அவர்களுக்கு உபுண்டு பற்றிய அடிப்படை மற்றும் உபுண்டுவுடன் எவ்வாறு தொடங்குவது பற்றி கற்றுத்தறும் ஒரு நிகழ்ச்சி. இது ஒரு தொடர்ச்சியான இணைய வழி சந்திப்பு.(IRC chat) இதில் நீங்கள் உபுண்டுவை எவ்வாறு நிறுவுவது. விண்டோஸிற்கு இணையான உபுண்டு மென்பொருட்கள்