Skip to main content

Posts

Showing posts from May, 2012

இலவச லேப்டாப்

ஒரு மாதத்திற்கு முன்பாக சொல்வேண்டிய ஒரு விஷயம். சிறிது காரணத்தால் தாமதமாகிவிட்டது. தமிழ்நாட்டில் பல மாணவர்களுக்கு இலவச லேப்டாப் கிடைத்திருக்கலாம். அதில் நானும் ஒருவன். கல்லூரியில் படிக்கும் எங்களுக்கும் கிடைத்தது மிக்க மகிழ்ச்சி. எங்களுக்கு கிடைத்தது லெனேவோ மாடல். 2 gb ram, pentium dual-core processor, 320 harddisk கொண்ட மடிக்கணினி. இதில் டிஸ்க் டிரைவ், web-cam, wi-fi போன்ற அதிக முக்கியத்துவமில்லாத எதுவுமில்லை.

டெர்மினலில் கட்டளைகளை வேகமாக இயக்க மறுபெயர்களை(alias) உருவாக்குதல்

நாம் இந்த பகுதியில் எவ்வாறு மறுபெயர்கள் அதாவது aliasயினை உபுண்டுவில் உருவாக்குவது என்று காணலாம். மறுபெயர்கள் நமக்கு விருப்பமான கட்டளைகளுக்கு  சிறிய வார்த்தையினை சூட்டி அந்த கட்டளையினை விரைவாக இயக்க உதவுகிறது. இது நீளமான கட்டளைகளையும், அல்லது நாம் அடிக்கடி பயன்படுத்தும் கட்டளைகளையும் வேகமாக இயக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உதாரணத்திற்கு உபுண்டுவின் repositoryஐ updateசெய்வதற்கு (sudo apt-get update), அதெபோல upgrade செய்வதற்கு (sudo apt-get upgrade). இப்போது நமது home அடைவினுள் .bash_aliases என்ற மறைவான ஒரு கோப்பினை உருவாக்குவோம். $ ~/.bash_aliases; gedit ~/.bash_aliases இப்போது ஒரு மறுபெயரினை உருவாக்கலாம். உதாரணத்திற்கு நமது repositoryகளை update செய்வதற்கான கட்டளைக்கு ஒரு மறுபெயரினை உருவாக்க.

இதுவரை வெளியான அனைத்து கணியம் இதழையும் ஒரே சொடுக்கில் தரவிறக்க

கணியம் ஒவ்வொரு மாதமும் தனது மின்னிதழை வெளிவிட்டுகொண்டுள்ளது. இதுவரை ஐந்து இதழ்களை வெளிவிட்டுள்ளது. இந்த ஐந்து இதழ்களையும் ஒவ்வொன்றாக தரவிறக்காமல் ஒரேயடியாக தரவிறக்க ஒரு சிறிய நிரல். #!/bin/bash cd ~/Documents for a in {1..5}