Skip to main content

டெர்மினலில் கட்டளைகளை வேகமாக இயக்க மறுபெயர்களை(alias) உருவாக்குதல்


நாம் இந்த பகுதியில் எவ்வாறு மறுபெயர்கள் அதாவது aliasயினை உபுண்டுவில் உருவாக்குவது என்று காணலாம். மறுபெயர்கள் நமக்கு விருப்பமான கட்டளைகளுக்கு  சிறிய வார்த்தையினை சூட்டி அந்த கட்டளையினை விரைவாக இயக்க உதவுகிறது. இது நீளமான கட்டளைகளையும், அல்லது நாம் அடிக்கடி பயன்படுத்தும் கட்டளைகளையும் வேகமாக இயக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உதாரணத்திற்கு உபுண்டுவின் repositoryஐ updateசெய்வதற்கு (sudo apt-get update), அதெபோல upgrade செய்வதற்கு (sudo apt-get upgrade).

இப்போது நமது home அடைவினுள் .bash_aliases என்ற மறைவான ஒரு கோப்பினை உருவாக்குவோம்.

$ ~/.bash_aliases; gedit ~/.bash_aliases

இப்போது ஒரு மறுபெயரினை உருவாக்கலாம். உதாரணத்திற்கு நமது repositoryகளை update செய்வதற்கான கட்டளைக்கு ஒரு மறுபெயரினை உருவாக்க.



alias update='sudo apt-get update'

இப்போது update எனும் மறுபெயரானது(alias) 'sudo apt-get update' எனும் கட்டளைஐ இயக்கும். இனி இதனை நாம் சேமித்து மூடிவிடலாம். இந்த மறுபெயரினை சோதிக்க திறந்து வைத்திருக்கும் டெர்மினலை மூடி மறுபடியும் திறக்கவும். இப்போது அதனை சோதிக்கலாம்.

$ update

'update' என்று நாம் கொடுத்த கட்டளையானது 'sudo apt-get update'கட்டளைளை இயக்கும். மேலும் சில மறுபெயர்களையும் உருவாக்கலாம்.

alias upgrade='sudo apt-get upgrade'

alias inst='sudo apt-get install'

alias autorm='sudo apt-get autoremove'


ஒவ்வோரு முறை புது மறுபெயர்களை சேர்க்கும் போதும் டெர்மினலை மூடி பிறகு திறக்கவும். அப்போது தான் அந்த மறுபெயர்கள்
செயல்படும்.

Comments

Popular posts from this blog

விண்டோஸை விட லினக்ஸ் சிறந்தது: பத்து காரணங்கள்

லினக்ஸ் பயன்படுத்த கடினம், விண்டோஸே சிறந்தது என கருதுபவர்களுக்காக 1. வைரஸ் அபாயம் கிடையாது: ஆம். பொரும்பாலான வைரஸ் நிரல்கள் விண்டோஸிற்காக எழுதப்படுபவை. லினக்ஸால் win32  நிரல்களை  செயல்படுத்த முடியாது. எனவே வைரஸ் வரும் என்ற கவலை வேண்டாம். 2. திற-மூலமென்பொருள் - விண்டோஸ் போல் அல்லாமல் லினக்ஸ் ஆனது திற-மூல-இயங்குதளம்(open-source).  எனவே நம்முடைய தேவைக்கு ஏற்ப நாம் இதனை மாற்றவே, பிறருக்கு அளிக்கவோ முழு சுதந்திரம் உண்டு.

சிடி/டிவிடிகளை காப்பி செய்யாதீர்கள்.

நாம் பொதுவாக டிவிடி படங்களை நம்முடைய கணினிகளில் டிவிடி டிரைவ்களில் போட்டு பார்ப்பது பழக்கம். நாம் நண்பர்களிடம் இருந்தோ அல்லது வேறுயாரிடமாவது இருந்தோ படங்களை வாங்கி உடனே பார்த்துவிட்டு தருவதற்கு முடியவில்லை என்றால் நாம் படங்களை காப்பி செய்து அதனை நம் கணினீயில் சேமிப்போம். அவ்வாறு சேமித்த படங்களை டிவிடி டிரைவில் போட்டு பார்ப்பது போன்றே சௌகரியமாக பார்ப்பது என்பது இயலாது. ஒவ்வொரு fileஐயும் நாம் விடியோ ப்ளேயரில் திறக்க வேண்டும். அதில் பலவிதமான fileகள் இருக்கும். நாம் ஒவ்வொன்றாக திறந்து நாம் பார்க்க வேண்டிய அந்த படத்தை பார்ப்பதற்குள் நேரம் ஆகிவிடும். சில fileகள் ஒழுங்காக காப்பி ஆகியிருக்காது. சில டிவிடிக்கள் காப்பி ஆக மறுக்கும்.

need your response

It has been a long time... my rest hours are reduced i only sleep for 5 to 6 hours a day.. so i can't post frequently.. sorry friends.. my university is a good place to refine myself. yes..! thoughts about my programming computers are refined there.. i always wanted share my experience.. but i feared of thinking that it will helpful for you or not.. most of us don't like to hear stories of others. so i stopped blogging and of course having less time.. i have earned some good friends there... who are interested in open-source technology.. very few of us only know the linux platform.. this semester mini project also in open softwares like mysql, postgrey sql i will start blogging my experience if you are interested.. regards, Mani G