Skip to main content

உங்கள் கண்களை மானிட்டரிடமிருந்து பாதுகாக்க

நம்முடைய கணினியை காப்பாற்ற antivirus, firewall போன்ற பலவற்றை பயன்படுத்துகிறோம். ஆனால் நம் உடல் நலனை பாதுகாப்பதை பலர் மறந்துவிடுகிறேம். நம் உடல் நலமே மிக முக்கியம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

அதிக நேரம் கணினி முன் வேலை செய்பவர்களுக்கும், பார்ப்பவர்களுக்கும் இது மிகவும் பயன்படும். இரவு நேரங்களில் நீங்கள் நீண்ட உங்கள் பதிவுகளையோ, கடிதங்களையோ type அடித்து கொண்டு இருப்பீர்களா? உங்கள்
கண்கள் சோர்வடைவதை உணர்ந்திருப்பீர்கள்.

பகல் நேரங்களில் உங்கள் மானிட்டர் திரை நன்கு பிரகாசமாக தெரியும், அவை பகல் வெளிச்சத்திற்கு ஏற்றவாறு அமைக்கப்பட்டிருக்கலாம். ஆனால் இரவில் அதிக வெளிச்சம் நம் கண்களுக்கு எரிச்சலூட்டும்.

நம் மானிட்டரின் வெளிச்சத்தை பகலிலும், இரவிலும் அடிக்கடி மாற்றிக்கொண்டுருக்க முடியாது. எனவே இந்த செயலி உங்களுக்கு உதவும்.

இது தானாகவே பகலிலும், இரவிலும் உங்கள் இடத்தின் வெளிச்சத்திற்கும், நேரத்திற்கும் ஏற்றவாறு உங்கள் மானிட்டரின் வெளிச்சத்தை மாற்றும்.

இதன் பெயர் f.lux.



 இதனை இங்கு தரவிறக்கி கொள்ளுங்கள்.

for windows downlad link: click here

இதனை இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள். பிறகு Change Settings சென்று

1. ADJUST YOUR LIGHTING FOR DAY AND NIGHT:
உங்களுக்கு வேண்டியவாறு பகலிலும், இரவிலும் எவ்வளவு
வெளிச்சம் வேண்டும் என்பதை தேர்வு செய்யுங்கள்.


2. SET YOUR LOCATION:
என்பதில் சென்று Change அழுத்தினால் where am i? என்று தோன்றும்
windowல் locate என்பதை கிளிக் செய்து வரும் mapல் உங்கள் இருப்பிடத்தினை தேடி latitude and longitudeனை copy செய்து அதில் தரவும்.


சென்னை: 13.060422, 80.249583

3. TRANSITION SPEED:
திடீர் என்று மானிட்டரின் வெளிச்சம் அதிகரிப்பதே, குறைவதே நம் கண்களுக்கு ஒவ்வாது. ஆகவே வெளிச்சம் மாறும் வேகத்தை உங்களுக்கு ஏற்றவாறு தேர்வு செய்யுங்கள்.

இது முற்ற்லும் இலவசமானது.

linux மற்றும் mac பதிப்புகளும் உள்ளன.

official website: http://stereopsis.com/flux/

உங்கள் கருத்துகளை கூறுங்கள். உங்களுக்கு பயன்பட்டால் மற்றவர்களுக்கும் சென்றடைய ஒட்டுப்போடுங்கள்.

Comments

Post a Comment

Popular posts from this blog

ரிதம்பாக்ஸில் ரேடியோ மிர்ச்சி

உபுண்டு 12.04ல் bansheeயை தூக்கிவிட்டு மறுபடியும் rhythmbox default இசைப்பானாக இடம்பெற்றுள்ளது. ரிதம்பாக்ஸ்ல் bansheeயை விட பல அம்சங்கள் குறைவுதான். ஏன் banshee ஐ எடுத்தார்கள் என்று  சரியாக புரியவில்லை. என்னதான் high-bitrateல் பாடல்கள் இருந்தாலும் fm கேட்பது ஒரு மகிழ்ச்சிதான். சில வருடங்களுக்கு முன்பு எங்கள் தெருக்களில் சூரியன் fm, ரேடியோ மிர்ச்சி போன்றவை தான் என்னை எழுப்பும்.

உபுண்டு டெர்மினலில் இருந்து இலவசமாக sms அனுப்பலாம்

இன்று டெர்மினலில் இருந்து எப்படி இலவசமாக sms அனுப்புவது என்று பார்க்கலாம். way2sms சென்று sms அனுப்புவதற்கு அந்த தளத்தின் விளம்பரங்களை தாண்டிதான் அனுப்ப வேண்டியிருக்கிறது. விளம்பரங்களை பார்க்கமால் சுலபமாக இந்த script ஐ பயன்படுத்தி இலவசமாக sms அனுப்பலாம். இதற்கு முதலில் way2sms ன் பயனராக இருக்க வேண்டும். இல்லை என்றால way2sms.com சென்று ஒரு அக்கவுண்டினை தொடங்கிகொள்ளவும். username, password  வேண்டும்.

விண்டோஸை விட லினக்ஸ் சிறந்தது: பத்து காரணங்கள்

லினக்ஸ் பயன்படுத்த கடினம், விண்டோஸே சிறந்தது என கருதுபவர்களுக்காக 1. வைரஸ் அபாயம் கிடையாது: ஆம். பொரும்பாலான வைரஸ் நிரல்கள் விண்டோஸிற்காக எழுதப்படுபவை. லினக்ஸால் win32  நிரல்களை  செயல்படுத்த முடியாது. எனவே வைரஸ் வரும் என்ற கவலை வேண்டாம். 2. திற-மூலமென்பொருள் - விண்டோஸ் போல் அல்லாமல் லினக்ஸ் ஆனது திற-மூல-இயங்குதளம்(open-source).  எனவே நம்முடைய தேவைக்கு ஏற்ப நாம் இதனை மாற்றவே, பிறருக்கு அளிக்கவோ முழு சுதந்திரம் உண்டு.