Skip to main content

விண்டோஸில் PC SUIT இல்லாமல் இணைய இணைப்பு

நீண்ட நாள் கழித்து விண்டோஸ் பற்றிய ஒரு பதிவு. லேப்டாப்பில் விண்டோஸ் இருப்பதால் அதனை உப்யோகிக்கும் வாய்ப்பு கிடைத்தது. என்னுடைய மொபைலில் இருந்து விண்டோஸில் எவ்வாறு இணைய இணைப்பினை ஏற்படுத்துவது என்று தேடி ஒரு வழியாக கண்டுபிடித்தேன்.
லினக்ஸில் இந்த பிரச்சினையே இல்லை.

என்னுடை nokia 2700  மாடலினை நோக்கியா பிசி சூட் மூலமாக இணைய இணைப்பினை ஏற்படுத்தலாம்.  ஆனால் என்னுடைய வேகம் குறைந்த இணைய இணைப்பிலிருந்து நோக்கியா பிசி சூட் தரவிறக்க அதிக நேரம் ஆகும். எனவே பிசி சூட் இல்லாமல்  இணைய இணைப்பினை ஏற்படுத்தினேன்.

முதலில் nokia connectivity cable driverஇனை கீழிறிந்து தரவிறக்கி கொள்ளுங்கள். வெறும் 7 mb தான்.

Nokia_Connectivity_Cable_Driver_eng.msi

பிறகு அதனை உங்கள் விண்டோஸில் நிறுவி கொள்ளுங்கள். அதற்கு முன்னால் உங்கள் மொபைலினை இணைக்க வேண்டாம். அதனை நிறிவி முடித்த பின் உங்கள் மொபைலினை இணையுங்கள்.

இப்போது runல் சென்று devmgmt.msc என்று அடித்து எண்டர் தரவும்.






ஒரு விண்டோ ஒன்று தோன்றும். அதில் modem என்பதனை கிளிக் செய்யவும். உங்களுடைய மொபைல் மாடல் அதில் காட்டும்.




அதனை இருமுறை கிளிக் செய்தால் தோன்றும் விண்டோவில் Advanced டேபினை தேர்ந்தெடுக்கவும்.

அதில் உள்ள Extra initialization commands பெட்டியில்

+CGDCONT=,,"TATA.DOCOMO.INTERNET"

என்று தரவும். இதில் "TATA.DOCOMO.INTERNET" என்பது docomoவின் APNஆகும். உங்கள் நெட்வொர்க் ஆபிரேட்டார்க்கு தகுந்த APNனை தரவும். உதாரணத்திற்கு vodafoneன் APN ”WWW". எனவே vodafone உபயோகிப்பவர்கள்

+CGDCONT=,,"WWW"

என்று தரவும்.




பிறகு ok கொடுத்து மூடிவிடவும். இப்போது control panelல் network and sharing centerஇனை தேர்ந்தெடுக்கவும்.




இதில் Set up new connection or network என்பதை கிளிக் செய்யவும்.

பிறகு Setup dial-up connection கிளிக் செய்யவும்.



அடுத்த விண்டோவில் dial-up numberல் *99# என்று தரவும். படத்தில் உள்ளவாறு remember passwordல் check செய்யவும். பிறகு allow other people என்பதையும் check செய்து connect செய்யுங்கள்.



 

அவ்வளவுதான் இனிமேல் நீங்கள் சுலபமாக இணைய இணைப்பினை ஏற்படுத்தலாம்.

run சென்று rasphone  என்று தரவும். தோன்றும் விண்டோவில் dial செய்யவும்.

Comments

  1. SAMSUNG MPBILE LA eppadi conect pananum pls help me sir.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

கட்டற்றமென்பொருள் பற்றிய மாத மின்இதழ்

உலகெங்கிலும் உள்ள தமிழ் மக்களுக்கு கணினிதொழில்நுட்பத்தை பற்றி அறிமுகம் செய்யும் கணியம் என்ற புதிய மாத மின்னிதழை வெளியிடுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். கணினி கற்க ஆங்கிலம் தடையாக இருந்த காலம் மாறி தொழில்னுட்பங்கள் யாவும் தமிழில் பெருகும் இந்த காலத்தில் மென்பொருள் பற்றிய நுட்பங்களை தமிழில் வழங்குவதில் பெருமை கொள்கிறோம். இந்த இதழின் கட்டுரைகள் : கட்டற்ற மென்பொருள் லினக்ஸ் பயனர் குழு – ஓர் அறிமுகம் உபுண்டு நிறுவுதல்

படங்களை 700mbயில் தரமாக உருமாற்றம் செய்ய

நம்மிடம் இருக்கும் டிவிடிபடங்களில் பிடித்தவற்றை அவ்வப்போது பார்த்துக்கொள்ள நாம் அவற்றை தனியாகவோ அல்லது, இமேஜாகவோ காபி செய்து வைத்துக்கொள்வோம். அவை அதிக இடத்தை பிடித்துக்கொள்ளும் ஒவ்வொன்றும் படத்திற்கேற்ற மாதிரி 2 முதல் 4 ஜிபி வரை கொள்ளளவு கொண்டிருக்கும். எனவே நாம் அவற்றை அதன் அளவில் குறைத்து அதனை வேறு உருமாட்டில் சேமித்து வைத்துக்கொள்ள விரும்புவோம். அவ்வாறு அதனை மாற்றுவதால் நம்முடைய கணினியின் இடம் மிச்சமாகிறது, மேலும் எளிதாக அவற்றை நம் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். அளவில் குறைவாக இருப்பதால் இணையத்திலும் அவற்றை ஏற்றி அதனை மற்றவர்களுடன் எளிதாக பகிர்ந்துகொள்ளலாம். ஆனால் இதில் இருக்கும் ஒரு குறைபாடு அதன் தரம். அதில் மாற்றத்தை நன்றாக பார்க்கமுடியும். சில மாற்றப்பட்ட வீடியோக்கள் தரம் குறைவாக இருக்கும். வீடியோ கன்வர்ட்டர்களை பயன்படுத்தும் பலருக்கு இது நன்கு தெரிந்திருக்கும். இணையங்களில் டோரண்ட்களை பயன்படுத்தி படம் இறக்குபவர்க்கள் 700mb களில் தரமான படங்கள் இருப்பதை பார்த்திருக்கலாம். நாம் எவ்வாறு இதுபோன்று தரமாக வீடியோக்களை மாற்றுவது என்று பார்ப்போம்.

சிடி/டிவிடிகளை காப்பி செய்யாதீர்கள்.

நாம் பொதுவாக டிவிடி படங்களை நம்முடைய கணினிகளில் டிவிடி டிரைவ்களில் போட்டு பார்ப்பது பழக்கம். நாம் நண்பர்களிடம் இருந்தோ அல்லது வேறுயாரிடமாவது இருந்தோ படங்களை வாங்கி உடனே பார்த்துவிட்டு தருவதற்கு முடியவில்லை என்றால் நாம் படங்களை காப்பி செய்து அதனை நம் கணினீயில் சேமிப்போம். அவ்வாறு சேமித்த படங்களை டிவிடி டிரைவில் போட்டு பார்ப்பது போன்றே சௌகரியமாக பார்ப்பது என்பது இயலாது. ஒவ்வொரு fileஐயும் நாம் விடியோ ப்ளேயரில் திறக்க வேண்டும். அதில் பலவிதமான fileகள் இருக்கும். நாம் ஒவ்வொன்றாக திறந்து நாம் பார்க்க வேண்டிய அந்த படத்தை பார்ப்பதற்குள் நேரம் ஆகிவிடும். சில fileகள் ஒழுங்காக காப்பி ஆகியிருக்காது. சில டிவிடிக்கள் காப்பி ஆக மறுக்கும்.