பொதுவாக லேப்டாப்பின் செயல்பாடு, அதில் ஓடிக்கொண்டிருக்கும் நிரல்கள்,
மானிட்டரின் வெளிச்சம் போன்ற பல விஷயங்கள் லேப்டாப்பின் பேட்டரியை எடுத்துக்கொள்ளும்.
ஜூபிடர் மின்னாற்றல் மற்றும் வன்பொருட்களை நிர்வகிக்க உதவும் ஒரு சிறிய மென்பொருள். இது லேப்டாப்பின் பேட்டரி சக்தியின் நேரத்தை அதிக்கப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டது.
மேலும் ஜூபிடர் பொதுவாக பயன்படுத்தப்படும் பயன்பாடுகளான வெளியீடு, மானிட்டரின் resolution, WiFi, புளூடூத் போன்றவற்றையும் சுலபமாக நிர்வகிக்க உதவுகிறது.
ஜூபிடர் லினக்ஸ் அடிப்படையில் இயங்கும் அனைத்து சாதனங்களிலும் பயன்படும்.
இதன் சில அம்சங்கள்:
- AC அல்லது batteryக்கு ஏற்றவாறு CPU modeஇனை தானாக மாற்றிக்கொள்ளும்.
- கெர்னலை AC அல்லது batteryக்கு ஏற்றவாறு தானாக மாற்றிக்கொள்ளும்.
- தானாகவே வன்பொருட்களை பேட்டரிக்கு சக்திக்கு ஏற்றவாறு tune செய்யும்.
- Asus Super Hybrid Engine (SHE) இனை ஆதரிக்கிறது.
- சுலபமாக பயன்படுத்திக்கொள்ளமுடியும்.
sudo add-apt-repository ppa:webupd8team/jupiter
sudo apt-get update
sudo apt-get install jupiter
என்று தரவும்மேலே உள்ள panelல் ஜூபிடர் applet இருப்பதை காணலாம். அதனை கிளிக் செய்து நமக்கு ஏற்றவாறு மாற்றிக்கொள்ளலாம்.
மடிக்கணினியில் உபுண்டு இயங்குதளம் வைத்திருப்பவர்கள் அனைவரும் அவசியம் நிறுவி வைத்திருக்க வேண்டிய மென்பொருள். மிகவும் அவசியமான பதிவும் கூட ... நன்றி மணி..
ReplyDeleteகண்டிப்பாக...
Deleteநன்றி கதிர்வேல்.
asus eeepc உபயோகிப்பவர்கள் SHE support பெற்
ReplyDelete$ sudo apt-get install jupiter-support-eee
என்று தரவும்.
thanks for sharing
ReplyDelete