Skip to main content

லினக்ஸ் டெர்மினலில் star wars

பல்கலைகழக தேர்வுகள் நடைபெற்றத்தால் என்னால் தொடர்ந்து பதிவுகளை போட முடியவில்லை..
இப்போ free ஆய்ட்டேன். இனிமேல் கண்டிப்பா மாதம் ஒரு 10 போஸ்ட் ஆவது போடலாம்னு நினைக்கிறேன்.

ஒபன் சோர்ஸ் நுட்பங்களை பற்றி மாணவர்களுக்கு எடுத்துசெல்லும் விதமா அண்ணா பல்கலைகழகம் M.sc - foss (free open source softwares) னு ஒரு ஆன்லைன் புரோகிராமை கொண்டுவந்துருக்காங்க.

இது ரெண்டு வருட ஆன்லைன் படிப்பு.
வழக்கமா ug முடிச்சிட்டு எல்லாரும் M.C.A, M.sc(IT, CS, CST)னு படிக்கிறதுக்கு பதிலா இத படிக்கலாம்.
இது கண்டிப்பா புரட்சிகரமான ஒரு திட்டம்தான். பல நல்ல விஷயங்கள் இதுல இருக்கு.
உங்களுக்கு உதவி செய்ய ஏராளமானவங்க இருக்காங்க. உங்க localல இருக்க lug'ல இதபத்தி கேட்டுபாருங்க.


http://cde.annauniv.edu/MSCFOSS/

மேல தெரிஞ்சிக்க இந்த தளத்துல போய் பாத்துக்கோங்க.

உங்க லினக்ஸ் டெர்மினலில் star wars பாக்கணுமா???

$ telnet towel.blinkenlights.nl


மெல இருக்குற கமேண்ட காபி பண்ணி உங்க டெர்மினலில் போடுங்க.
அப்புறம் பாருங்க STAR WARS எபிசோட் ஒடும்.

Comments

Popular posts from this blog

ரிதம்பாக்ஸில் ரேடியோ மிர்ச்சி

உபுண்டு 12.04ல் bansheeயை தூக்கிவிட்டு மறுபடியும் rhythmbox default இசைப்பானாக இடம்பெற்றுள்ளது. ரிதம்பாக்ஸ்ல் bansheeயை விட பல அம்சங்கள் குறைவுதான். ஏன் banshee ஐ எடுத்தார்கள் என்று  சரியாக புரியவில்லை. என்னதான் high-bitrateல் பாடல்கள் இருந்தாலும் fm கேட்பது ஒரு மகிழ்ச்சிதான். சில வருடங்களுக்கு முன்பு எங்கள் தெருக்களில் சூரியன் fm, ரேடியோ மிர்ச்சி போன்றவை தான் என்னை எழுப்பும்.

உபுண்டு டெர்மினலில் இருந்து இலவசமாக sms அனுப்பலாம்

இன்று டெர்மினலில் இருந்து எப்படி இலவசமாக sms அனுப்புவது என்று பார்க்கலாம். way2sms சென்று sms அனுப்புவதற்கு அந்த தளத்தின் விளம்பரங்களை தாண்டிதான் அனுப்ப வேண்டியிருக்கிறது. விளம்பரங்களை பார்க்கமால் சுலபமாக இந்த script ஐ பயன்படுத்தி இலவசமாக sms அனுப்பலாம். இதற்கு முதலில் way2sms ன் பயனராக இருக்க வேண்டும். இல்லை என்றால way2sms.com சென்று ஒரு அக்கவுண்டினை தொடங்கிகொள்ளவும். username, password  வேண்டும்.

விண்டோஸை விட லினக்ஸ் சிறந்தது: பத்து காரணங்கள்

லினக்ஸ் பயன்படுத்த கடினம், விண்டோஸே சிறந்தது என கருதுபவர்களுக்காக 1. வைரஸ் அபாயம் கிடையாது: ஆம். பொரும்பாலான வைரஸ் நிரல்கள் விண்டோஸிற்காக எழுதப்படுபவை. லினக்ஸால் win32  நிரல்களை  செயல்படுத்த முடியாது. எனவே வைரஸ் வரும் என்ற கவலை வேண்டாம். 2. திற-மூலமென்பொருள் - விண்டோஸ் போல் அல்லாமல் லினக்ஸ் ஆனது திற-மூல-இயங்குதளம்(open-source).  எனவே நம்முடைய தேவைக்கு ஏற்ப நாம் இதனை மாற்றவே, பிறருக்கு அளிக்கவோ முழு சுதந்திரம் உண்டு.