Skip to main content

கணியம் – இதழ் 3

வணக்கம்.
‘கணியம்‘ இதழை படித்தும், பாராட்டியும் வரும் அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றிகள். கட்டற்ற மென்பொருட்கள் பற்றிய அறிவை உலகெங்கும் வாழும் தமிழர்கள் அனைவரையும் சென்றடையும் முயற்சியில் பங்குபெறும் அனைத்து கட்டுரை ஆசிரியர்களுக்கும் உலகத்தமிழர் அனைவர் சார்பிலும் பாராட்டுகிறேன். கணிணியில் தட்டச்சு பயிற்சியின்றி தமிழ் எழுதுவது, மிகவும் கடினமானது. பல்வேறு கருவிகளை பயன்படுத்தி, பல மணிநேரங்களை ஒதுக்கி, அவர்கள் எழுதும் இந்த பணி, தமிழை தொழில்நுட்ப தேரிலேற்றி, அடுத்த தலைமுறைக்கு தயார்படுத்துகிறது. விக்கிபீடியா ஊடகப் போட்டி, பிப்ரவரி 29ம் நாள் நிறைவு பெற்றது. 100 பங்கேற்பாளர்களும் 3000 படைப்புகளும்
எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 300க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களும், 15217 படைப்புகளும் தரப்பட்டன. இது தமிழ் விக்கிபீடியாவிற்கு கிடைத்த மாபெரும் வெற்றி. கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றிகள். போட்டி முடிவுகள் மார்ச் 25ல் வெளியிடப்படும். போட்டியில் கலந்துகொண்ட படைப்புகளை காண http://commons.wikimedia.org/wiki/Category:TamilWiki_Media_Contest கட்டற்ற மென்பொருட்களை, தமிழில் வீடியோ வடிவிலும் கற்றுக்கொள்ளலாம். விவரங்கள் உள்ளே. வாசகர்களின் வேண்டுகோளுக்கிணங்க, கணியம் இதழ், விரைவில் HTML வடிவிலும் இணைய தளத்தில் வெளியிடப்படும். ‘கணியம்‘ தொடர்ந்து வளர, உங்களது உழைப்பும் தேவை. கட்டுரைகள், படங்கள், ஓவியங்கள், புத்தக அறிமுகம், துணுக்குகள், நகைச்சுவைகள் என உங்களது படைப்புகளையும் editor@kaniyam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம். இந்த இதழின் கட்டுரைகள் :
  • நீங்கள் கட்டாயமாக வைத்திருக்க வேண்டிய 5 கட்டற்ற மென்பொருட்கள்
  • Arduino – ஓர் அறிமுகம்
  • டைம் ட்ரைவ் – கால எந்திரம்
  • ஈமேக்ஸ் உரைதிருத்தி – ஓர் அறிமுகம்
  • க்னு/லினக்ஸ் கற்போம்
  • குரோமியம் & க்ரோம்
  • shutter ஒரு வரப்பிரசாதம்
  • 170க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் FOSS LAB நிறுவும் பாஸ்கர்
  • Scribus – பகுதி 3
  • சூப்பர் மேன் – ஜாவாஸ்கிரிப்ட்
  • அண்ணா பல்கலைக்கழகத்தின் அதிரடி கோர்ஸ்
  • கிட் - Distributed Revision Control System
  • வேலை வாய்ப்புகள்
  • தமிழில் வீடியோ பாடங்கள்
  • “Free Software” உள்ள “Free” பற்றிய விளக்கம்
  • வாசகர் கருத்துகள்
  • நிகழ்வுகள்
  • சென்னையில் ஸ்டால்மேன்
பதிவிறக்கம் செய்ய: kaniyam-03.pdf

Comments

Popular posts from this blog

ரிதம்பாக்ஸில் ரேடியோ மிர்ச்சி

உபுண்டு 12.04ல் bansheeயை தூக்கிவிட்டு மறுபடியும் rhythmbox default இசைப்பானாக இடம்பெற்றுள்ளது. ரிதம்பாக்ஸ்ல் bansheeயை விட பல அம்சங்கள் குறைவுதான். ஏன் banshee ஐ எடுத்தார்கள் என்று  சரியாக புரியவில்லை. என்னதான் high-bitrateல் பாடல்கள் இருந்தாலும் fm கேட்பது ஒரு மகிழ்ச்சிதான். சில வருடங்களுக்கு முன்பு எங்கள் தெருக்களில் சூரியன் fm, ரேடியோ மிர்ச்சி போன்றவை தான் என்னை எழுப்பும்.

உபுண்டு டெர்மினலில் இருந்து இலவசமாக sms அனுப்பலாம்

இன்று டெர்மினலில் இருந்து எப்படி இலவசமாக sms அனுப்புவது என்று பார்க்கலாம். way2sms சென்று sms அனுப்புவதற்கு அந்த தளத்தின் விளம்பரங்களை தாண்டிதான் அனுப்ப வேண்டியிருக்கிறது. விளம்பரங்களை பார்க்கமால் சுலபமாக இந்த script ஐ பயன்படுத்தி இலவசமாக sms அனுப்பலாம். இதற்கு முதலில் way2sms ன் பயனராக இருக்க வேண்டும். இல்லை என்றால way2sms.com சென்று ஒரு அக்கவுண்டினை தொடங்கிகொள்ளவும். username, password  வேண்டும்.

விண்டோஸை விட லினக்ஸ் சிறந்தது: பத்து காரணங்கள்

லினக்ஸ் பயன்படுத்த கடினம், விண்டோஸே சிறந்தது என கருதுபவர்களுக்காக 1. வைரஸ் அபாயம் கிடையாது: ஆம். பொரும்பாலான வைரஸ் நிரல்கள் விண்டோஸிற்காக எழுதப்படுபவை. லினக்ஸால் win32  நிரல்களை  செயல்படுத்த முடியாது. எனவே வைரஸ் வரும் என்ற கவலை வேண்டாம். 2. திற-மூலமென்பொருள் - விண்டோஸ் போல் அல்லாமல் லினக்ஸ் ஆனது திற-மூல-இயங்குதளம்(open-source).  எனவே நம்முடைய தேவைக்கு ஏற்ப நாம் இதனை மாற்றவே, பிறருக்கு அளிக்கவோ முழு சுதந்திரம் உண்டு.