Skip to main content

ஆப்லைனில் உபுண்டு உபயோகிப்பவர்களுக்கு மிகவும் பயனுள்ள ஒன்று

ஒரு சில காரணங்களால் உபுண்டுவில் இணைய இணைப்பினை ஏற்படுத்த இயலாமல் இருப்போம். எனவே சில மென்பொருட்களை நிறுவுவது மிகவும் சிரமமாக இருக்கும். சில *.deb களை இணையம் உள்ள கணினியில் இருந்த்து தரவிறக்கி நிறுவினாலும் சில பிரச்சனைகள் ஏற்படும். எனவே இணையம்

இல்லாத உபுண்டு பயனாளர்களுக்கு இது மிகவும் பயன்படும். இது நான் ரொம்ப  நாளாக தேடிக்கொண்டிருந்த ஒன்று. இன்று தான் எனக்கு அகப்பட்டது. உங்களுக்கு தேவையானதெல்லாம் இவை தான்.



1. ஆப்லைனில் உள்ள உபுண்டு.
2. ஒரு பென் டிரைவ்.
3. இணைய இனைப்பு உள்ள வேறு கணினி. (net cafe, உங்கள் நண்பர்களிடம் இணையம் இருந்தால்)

இதன் பெயர் keryx. இதனை இங்கு இருந்து தரவிறக்கி கொள்ளுங்கள்.
keryx
இதனை தரவிறக்கி உங்கள் பென் டிரைவில் extract செய்து கொள்ளுங்கள்.

பிறகு உபுண்டுவில் சென்று terminalஐ திறந்து கொள்ளுங்கள்.

$cd /media/PEN/keryx_1.0-public21_portable/bin என்று அடியுங்கள்.

இங்கு PEN என்பது உங்கள் பென் டிரைவின் பெயர்.
பிறகு அங்கு இருக்கும் keryx.py என்பதை இயக்க வேண்டும். அதற்கு

$python keryx.py

என்று கொடுத்தவுடன் வரும் விண்டோவில் கீழே name கொடுத்து ADD செய்தால் மேலே வந்துவிடும்.  பிறகு இணைய இணைப்பு உள்ள கணினிக்கு சென்று உங்கள் பென் டிரைவினை சொருகி உபுண்டு வாக இருந்த்தால் மேலே சொன்னது போல keryx.pyஐ இயக்குங்கள்.



விண்டோஸாக இருந்த்தால் நீங்கள்  python மற்றும் pyGTK அதில் இருக்கவேண்டும். இரண்டையும் இங்கு தரவிறக்கி கொள்ளுங்கள்.


python

pyGTK

பிறகு அதனை விண்டோஸில் இயக்குங்கள். விண்டோவின் வலது புறம் உள்ள Manageஇனை கிளிக்செய்தால் அணைத்து பேக்கேஜ்களின் லிஸ்டும் தரவிறக்கப்பட்டு காட்டும் உங்களுக்கு வேண்டியவற்றை தரவிறக்கி கொள்ளுங்கள் அது அந்த பேக்கேஜ் மற்றும் அதன் dependencyகளுடன்
சேர்த்து தரவிறங்கி விடும்.
பிறகு உங்கள் ஆப்லைன் உபுண்டுவில்

$cd /media/PEN/keryx_1.0-public21_portable/data/downloads/packages

சென்று

$sudo dpkg -i *

என்று தரவும். அவ்வளவு தான். உங்கள் பேக்கஜ்கள் அணைத்தும் உங்கள் உபுண்டுவில்  நிறுவப்பட்டு விடும்.

இது debian based லினக்ஸ்களில் மட்டுமே உதவும். (ubuntu, linux mint...)

Comments

Popular posts from this blog

கட்டற்றமென்பொருள் பற்றிய மாத மின்இதழ்

உலகெங்கிலும் உள்ள தமிழ் மக்களுக்கு கணினிதொழில்நுட்பத்தை பற்றி அறிமுகம் செய்யும் கணியம் என்ற புதிய மாத மின்னிதழை வெளியிடுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். கணினி கற்க ஆங்கிலம் தடையாக இருந்த காலம் மாறி தொழில்னுட்பங்கள் யாவும் தமிழில் பெருகும் இந்த காலத்தில் மென்பொருள் பற்றிய நுட்பங்களை தமிழில் வழங்குவதில் பெருமை கொள்கிறோம். இந்த இதழின் கட்டுரைகள் : கட்டற்ற மென்பொருள் லினக்ஸ் பயனர் குழு – ஓர் அறிமுகம் உபுண்டு நிறுவுதல்

அழகான ASCII எழுத்துகளை டெர்மினலில் உருவாக்க

நம்முடைய மொபைலில் ascii smsகளை பார்த்து பிறருக்கும் அனுப்பி மகிழ்ந்திருப்போம். வெறும் எழுத்துகளை வைத்துகொண்டு படங்களை உருவாக்குவது மிகவும் கடினமான காரியம். குனு/லினக்ஸில் சில டூல்கள் இது போல அழகான ASCII எழுத்துகளையும், படங்களையும் உருவாக்க நமக்கு உதவுகிறது.  FIGLET   இதனை உபுண்டுவில் நிறுவ   $ sudo apt-get install figlet என கொடுத்து நிறுவி கொள்ளவும். உங்கள் பெயரினை ascii யில் பார்க்க டெர்மினலில் $ figlet 'hello'  என கொடுத்து பாருங்கள். _          _ _       | |__   ___| | | ___  | '_ \ / _ \ | |/ _ \ | | | |  __/ | | (_) | |_| |_|\___|_|_|\___/ எப்புடி.??  அடுத்து சில படங்களை ascii யாக மாற்றுவது என பார்போம்.  இதற்கு பல டூல்கள் இருக்கின்றது. உதாரணத்திற்கு aview, jp2a jp2a நிறுவ $ sudo apt-get install jp2a எதாவது ஒரு இமேஜை மாற்ற( இமேஜ் jpg பார்மட்டில் இருக்க வேண்டும்)   $ jp2a sample.jpg இப்போது asciiஇல் தெரியும்.

need your response

It has been a long time... my rest hours are reduced i only sleep for 5 to 6 hours a day.. so i can't post frequently.. sorry friends.. my university is a good place to refine myself. yes..! thoughts about my programming computers are refined there.. i always wanted share my experience.. but i feared of thinking that it will helpful for you or not.. most of us don't like to hear stories of others. so i stopped blogging and of course having less time.. i have earned some good friends there... who are interested in open-source technology.. very few of us only know the linux platform.. this semester mini project also in open softwares like mysql, postgrey sql i will start blogging my experience if you are interested.. regards, Mani G