Skip to main content

உபுண்டுவிற்கான் VLC media player ஆப்லைனில் நிறுவ

அதிகமாக உபயோகப்படுத்தப்படும் மீடியா பிளேயர் என்று கேட்டால் பலருக்கு நினைவுக்கு வருவது vlc media ப்ளேயர்தான். வெறும் படம்பார்ப்பது, பாடல் கேட்பதை விட பல வசதிகள் இதில் உள்ளன. எந்த கோடக்கும் நிறுவாமல் யூடியூபில் இருந்து தரவிறக்கிய வீடியோக்களை பார்க்கலாம். வீடியோ ஸ்டீரிமிங்க் தளங்களிலிருந்து நேரடியாக வீடியோக்களை ஸ்டீரீம் செய்து பார்க்கலாம். வீடியோ மற்றும் ஆடீயோக்களை நமக்கு வேண்டியவாறு கன்வர்ட் செய்து கொள்ளலாம். வீடியொக்களை mp3ஆக மாற்றலாம். இதுபோல பல வசதிகளை கூறிக்கொண்டே போகலாம். உபுண்டுவில் கன்சோலில் இருந்த்து கூட நாம்
பாடல்களை இயக்கமுடியும். ஆனால் vlc உபுண்டுவுடன் இணைந்த்து வருவதில்லை. அதனை இணைய இணைப்பு இருந்த்தால் மட்டுமே கணினியில் நிறுவமுடியும். இணையம் இல்லாத கணினிகளுகு இது உதவும். கீழே உள்ள லிங்கிலிருந்து தரவிறக்கி கொள்ளுங்கள் vlc நிருவுவதற்கு முன் சில restricted extraசை நிறுவ here செல்லவும்.


click to download vlc for ubuntu 10.04

click to download vlc for ubuntu 11.04

பிறகு உபுண்டிவிற்கு சென்று ஒரு டைரக்டிரியில் போடுங்கள். டெர்மினலில் அந்த டைரக்ட்ரி சென்று

tar -xzvf VLC_Offline_Installer_11.04.tar.gz

மூலம் extract செய்து

./install.sh 

என்பதை இயக்கவும். பிறகு உங்கள் பாஸ்வேர்டை கொடுத்தால் vlc நிறுவப்பட்டு இயக்க தயாராகிவிடும். அவ்வளோதான். லினக்ஸ் மின்ட் போன்றவற்றில் vlc இணைந்தே இருக்கும்.

Comments

Popular posts from this blog

ரிதம்பாக்ஸில் ரேடியோ மிர்ச்சி

உபுண்டு 12.04ல் bansheeயை தூக்கிவிட்டு மறுபடியும் rhythmbox default இசைப்பானாக இடம்பெற்றுள்ளது. ரிதம்பாக்ஸ்ல் bansheeயை விட பல அம்சங்கள் குறைவுதான். ஏன் banshee ஐ எடுத்தார்கள் என்று  சரியாக புரியவில்லை. என்னதான் high-bitrateல் பாடல்கள் இருந்தாலும் fm கேட்பது ஒரு மகிழ்ச்சிதான். சில வருடங்களுக்கு முன்பு எங்கள் தெருக்களில் சூரியன் fm, ரேடியோ மிர்ச்சி போன்றவை தான் என்னை எழுப்பும்.

உபுண்டு டெர்மினலில் இருந்து இலவசமாக sms அனுப்பலாம்

இன்று டெர்மினலில் இருந்து எப்படி இலவசமாக sms அனுப்புவது என்று பார்க்கலாம். way2sms சென்று sms அனுப்புவதற்கு அந்த தளத்தின் விளம்பரங்களை தாண்டிதான் அனுப்ப வேண்டியிருக்கிறது. விளம்பரங்களை பார்க்கமால் சுலபமாக இந்த script ஐ பயன்படுத்தி இலவசமாக sms அனுப்பலாம். இதற்கு முதலில் way2sms ன் பயனராக இருக்க வேண்டும். இல்லை என்றால way2sms.com சென்று ஒரு அக்கவுண்டினை தொடங்கிகொள்ளவும். username, password  வேண்டும்.

விண்டோஸை விட லினக்ஸ் சிறந்தது: பத்து காரணங்கள்

லினக்ஸ் பயன்படுத்த கடினம், விண்டோஸே சிறந்தது என கருதுபவர்களுக்காக 1. வைரஸ் அபாயம் கிடையாது: ஆம். பொரும்பாலான வைரஸ் நிரல்கள் விண்டோஸிற்காக எழுதப்படுபவை. லினக்ஸால் win32  நிரல்களை  செயல்படுத்த முடியாது. எனவே வைரஸ் வரும் என்ற கவலை வேண்டாம். 2. திற-மூலமென்பொருள் - விண்டோஸ் போல் அல்லாமல் லினக்ஸ் ஆனது திற-மூல-இயங்குதளம்(open-source).  எனவே நம்முடைய தேவைக்கு ஏற்ப நாம் இதனை மாற்றவே, பிறருக்கு அளிக்கவோ முழு சுதந்திரம் உண்டு.