Skip to main content

Posts

Showing posts from March, 2012

அழகான ASCII எழுத்துகளை டெர்மினலில் உருவாக்க

நம்முடைய மொபைலில் ascii smsகளை பார்த்து பிறருக்கும் அனுப்பி மகிழ்ந்திருப்போம். வெறும் எழுத்துகளை வைத்துகொண்டு படங்களை உருவாக்குவது மிகவும் கடினமான காரியம். குனு/லினக்ஸில் சில டூல்கள் இது போல அழகான ASCII எழுத்துகளையும், படங்களையும் உருவாக்க நமக்கு உதவுகிறது.  FIGLET   இதனை உபுண்டுவில் நிறுவ   $ sudo apt-get install figlet என கொடுத்து நிறுவி கொள்ளவும். உங்கள் பெயரினை ascii யில் பார்க்க டெர்மினலில் $ figlet 'hello'  என கொடுத்து பாருங்கள். _          _ _       | |__   ___| | | ___  | '_ \ / _ \ | |/ _ \ | | | |  __/ | | (_) | |_| |_|\___|_|_|\___/ எப்புடி.??  அடுத்து சில படங்களை ascii யாக மாற்றுவது என பார்போம்.  இதற்கு பல டூல்கள் இருக்கின்றது. உதாரணத்திற்கு aview, jp2a jp2a நிறுவ $ sudo apt-get install jp2a எதாவது ஒரு இமேஜை மாற்ற( இமேஜ் jpg பார்மட்டில் இருக்க வேண்டும்)   $ jp2a sample.jpg இப்போது asciiஇல் தெரியும்.

கணியம் – இதழ் 3

வணக்கம். ‘கணியம்‘ இதழை படித்தும், பாராட்டியும் வரும் அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றிகள். கட்டற்ற மென்பொருட்கள் பற்றிய அறிவை உலகெங்கும் வாழும் தமிழர்கள் அனைவரையும் சென்றடையும் முயற்சியில் பங்குபெறும் அனைத்து கட்டுரை ஆசிரியர்களுக்கும் உலகத்தமிழர் அனைவர் சார்பிலும் பாராட்டுகிறேன். கணிணியில் தட்டச்சு பயிற்சியின்றி தமிழ் எழுதுவது, மிகவும் கடினமானது. பல்வேறு கருவிகளை பயன்படுத்தி, பல மணிநேரங்களை ஒதுக்கி, அவர்கள் எழுதும் இந்த பணி, தமிழை தொழில்நுட்ப தேரிலேற்றி, அடுத்த தலைமுறைக்கு தயார்படுத்துகிறது. விக்கிபீடியா ஊடகப் போட்டி, பிப்ரவரி 29ம் நாள் நிறைவு பெற்றது. 100 பங்கேற்பாளர்களும் 3000 படைப்புகளும்