Skip to main content

படங்களை 700mbயில் தரமாக உருமாற்றம் செய்ய

நம்மிடம் இருக்கும் டிவிடிபடங்களில் பிடித்தவற்றை அவ்வப்போது பார்த்துக்கொள்ள நாம் அவற்றை தனியாகவோ அல்லது, இமேஜாகவோ காபி செய்து வைத்துக்கொள்வோம். அவை அதிக இடத்தை பிடித்துக்கொள்ளும் ஒவ்வொன்றும் படத்திற்கேற்ற மாதிரி 2 முதல் 4 ஜிபி வரை கொள்ளளவு கொண்டிருக்கும். எனவே நாம் அவற்றை அதன் அளவில் குறைத்து அதனை வேறு உருமாட்டில் சேமித்து வைத்துக்கொள்ள விரும்புவோம். அவ்வாறு அதனை மாற்றுவதால் நம்முடைய கணினியின் இடம் மிச்சமாகிறது, மேலும் எளிதாக அவற்றை நம் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். அளவில் குறைவாக இருப்பதால் இணையத்திலும் அவற்றை ஏற்றி அதனை மற்றவர்களுடன் எளிதாக பகிர்ந்துகொள்ளலாம். ஆனால் இதில் இருக்கும் ஒரு குறைபாடு அதன் தரம். அதில் மாற்றத்தை நன்றாக பார்க்கமுடியும். சில மாற்றப்பட்ட வீடியோக்கள் தரம் குறைவாக இருக்கும். வீடியோ கன்வர்ட்டர்களை பயன்படுத்தும் பலருக்கு இது நன்கு தெரிந்திருக்கும். இணையங்களில் டோரண்ட்களை பயன்படுத்தி படம் இறக்குபவர்க்கள் 700mb களில் தரமான படங்கள் இருப்பதை பார்த்திருக்கலாம். நாம் எவ்வாறு இதுபோன்று தரமாக வீடியோக்களை மாற்றுவது என்று பார்ப்போம்.


ஒரு தரமான டிவிடி படம்:

    நம்மிடம் இருக்கும் டிவிடி படமானது முதலில் நல்ல ப்ரிண்ட் ஆக இருக்க வேண்டும். ஒரிஜினலாக இருந்தால் இன்னும் நல்லது. டிவிடியில் பெரும்பாலும் ஒரு படம் இருப்பதாக பார்த்துக்கொள்ளுங்கள். இரண்டு, மூன்று படங்கள் என்றால் கண்டிப்பாக அவை அளவில் குறைந்து, தரத்திலும் குறைவாகவே இருக்கும். மேலும் 5.1 ஆடியோ வேண்டும் என்றால் பெரும்பாலும் ஒருபடம் உள்ள டிவிடிகளில் தான் இருக்கும். எவ்வளவு தரமானதாக நம்மிடம் இருக்கிறதோ அந்த அளவு நன்றாக வெளியீடு கிடைக்கும்.

Auto Gordian Knot

 இது ஒரு இலவசமான மென்பொருள். இதனை பயன்படுத்திதான் நாம் நம்முடைய வீடியோக்களை தரமாக மாற்றுவதை செய்யபோகிறோம்.
இதனை இங்கிருந்து தரவிறக்கிகொள்ளவும். click here
இதன் முழு packageஐயும் தரவிறக்கி கொள்ளவும். அவை encodingகிற்கு தேவையான codecகளையும் கொண்டிருப்பதால் நாம் தனியாக அவற்றை நிறுவ தேவையில்லை. இது டிவிக்ஸ்(divx), மற்றும் எக்ஸ்விட்(xvid) encodingமுறையை மட்டுமே தற்போது ஆதரிக்கிறது. டிவிடி பிளேயர்கள் mkv, போன்றவற்றை ஆதரிக்காது. எனவே தற்போது இதனை கொண்டு avi உருமாட்டிற்குதான் சேமிக்க முடியும். இருந்தாலும் இதன் என்கோடிங் முறை நமக்கு தரமாக படங்களை மாற்றிதருவதடன் தற்போது இருக்கும் அணைத்து டிவிடி பிளேயர்களிலும் மாற்றிய படங்களை பார்க்கமுடியும்.

உங்கள் படத்தை டிரைவில் போட்டு, autoGKவை திறந்துக்கொள்ளுங்கள். உங்கள் டிவிடியில் VIDEO_TS என்ற போல்டருக்கு சென்றால் அங்கு பல
.IFO, .BUP, .VOB FILEகள் இருப்பதை காணலாம். .IFO என்பது information என்பதன் சுருக்கம். இதில் தான் படத்தை பற்றிய விவரங்கள் இருக்கும். இதனை கொண்டுதான் டிவிடி பிளேயர்கள் வரிசையாக மெனு, அடுத்து படம் என்று நமக்கு படித்து காட்டுகிறது. .BUP என்பது .IFOன் backup file மற்றும் .VOB வீடியோfile ஆகும்.



STEP 1:

autoGKவை திறந்து அதில் உங்கள் டிவிடியில் VIDEO_TS FOLDERக்குள் இருக்கும் .IFO fileஐ தேர்வு செய்யவும்.(டிவிடியில் ஒரே படம் என்றால்) இல்லை என்றால் தேவையான படத்தின் .VOB ஐ தேர்வுசெய்யுங்கள். output fileல் என்னபெயரில் சேமிக்க வேண்டுமோ அதனை தரவும்.

STEP 2:

அடுத்து உங்கள் படத்தின் ஆடியோ, மற்றும் சப்டைட்டில். உங்கள் டிவிடி 5.1 channel audioகொண்டிருந்தால் audio track(s) இல் காட்டும். உங்களுக்கு
தேவை என்றால் அதனை தேர்வு செய்யுங்கள். படத்தினை 700 mbக்குள் அடக்க வேண்டும் என்றால் 5.1 வேண்டாம். 2.1 ஐ தேர்வு செய்யவும். மேலும் பல மொழி டிராக்குகள் காட்டினால் உங்களுக்கு தேவையானதை மட்டும் தெர்வு செய்யவும். அடுத்து உள்ள subtitleல் உங்களுக்கு தேவையான subtitle இருந்தால் தேர்வு செய்து கொள்ளுங்கள்.

STEP 3:

இது தான் முக்கியமான் பகுதி. இங்கு மூன்று தேர்வுகள் உள்ளன. உங்களுக்கு தேவையானதை தேர்வு செய்யவும். உங்கள் படத்தை 700mbயில் மாற்றவேண்டும் என்றால் இரண்டாவதாக உள்ள custom sizeல் 700 என்று கொடுக்கவும்.

STEP 4:

    இது optional தான் இருந்தாலும் நம்முடைய படத்தின் தரத்தை இதன் மூலம் சற்று மாற்றலாம். advanced settings ல் உள்ள output resolution settingல் உங்களுக்கு தேவையான அகல அளவை தேர்வு செய்யுங்கள். உங்களின் டிவி widscreen என்றால் அதற்கேற்றமாதிரி படத்தின் அகலத்தை மாற்றிக்கொள்ளலாம். இதனை பற்றி தெரியவில்லை என்றால் autowidth ஐ தேர்வு செய்யவும்.
    அடுத்து output audio typeல் 700MBபடமாக மாற்றவேண்டும் என்றால் VBR MP3 Kbps ஐ தேர்வு செய்யவும். இது தரமான ஒலியும் குறைந்த அளவையும் எடுத்துக்கொள்வதால் வீடியோவின் தரம் சற்று அதிகமாகும். இல்லை உங்களுக்கு 5.1 அல்லது டிவிடியில் இருக்கும் audioவே வேண்டும் என்றால் originalஐ தேர்வு செய்யவும். இதனை பற்றியும் தெரியவில்லை என்றால் autoஐ தேர்வு செய்யவும். அடுத்து உங்களுக்கு விருப்பமான் codecஐ தேர்வு செய்யவும். output formatஇல் aviயே இருக்கட்டும். பிறகு ok கொடுக்கவும்.

 நாம் மாற்றியமைத்த தேர்வுகளின் படி நம் படத்தின் வெளியீடு எப்படி இருக்கும் என்பதை Previewவை கிளிக் செய்து பார்த்துக்கொள்ளவும்.
அது உங்களுக்கு திருப்தியாக இருப்பின்  Addjobஐ செர்த்து start செய்ய வேண்டியதுதான். வேலை முடிந்தபிறகு என்ன செய்யவேண்டும் என்பதையும் நீங்கள் தேர்வு செய்யலாம். defaultஆக do nothing இல் இருக்கும். நீங்கள் shutdown தேர்ந்தெடுத்தால் உங்கள் கணினி வேலை முடிந்தவுடன் தானாக shutdown ஆகிவிடும். அவ்வளவுதான் 700mb வீடியோ கிடைத்துவிட்டது. கிடைத்த வீடியோக்களை உங்கள் விருப்பம் போல உங்கள் கணினியிலோ அல்லது டிவிடிக்களில் எரித்து டிவிடி பிளேயர்களில் போட்டு பாருங்கள்.

இதில் அதிகமாக வசதி இல்லை என்று நினைக்காதிர்கள். autoGKவை திறந்து ctrl+F9 கீகளை அழுத்தி மறைத்து வைக்கப்பட்டிருக்கும் மெனுவை காணுங்கள்.

இந்த மென்பொருளின் இணையதளம்: click here to visit

உங்கள் கருத்துகளையும் ஓட்டினையும் அளிக்க மறக்காதீர்கள்.

Comments

  1. நன்றி..

    நல்ல தகவல்......

    ReplyDelete
  2. அருமையான தகவல்.

    commentக்கு word verification எடுத்து விடவும்.

    ReplyDelete
  3. எடுத்து விட்டுட்டேன்...

    உங்கள் கருத்துகளுக்கு நன்றி...

    ReplyDelete
  4. I CAN'T DOWNLOAD THAT SOFTWARE.

    ReplyDelete
  5. why prabha? you can easily download from that website. just click on downloads in left side. and you can choose from a lot of mirrors. download the full package. ok..

    ReplyDelete
  6. MP3 பைல்களை தரமாக குறைந்த MB உருமாற்றம் செய்வது .....

    ReplyDelete
  7. mp3 என்பதே ஆடியோ fileகளின் சுருக்கப்பட்ட formatதான். சில மென்பொருட்கள் மூலம் அதன் அளவை குறைக்களாம் ஆனால் அதன் தரம் குறையும்.

    ReplyDelete
  8. இந்த லிங்க் http://www.autogk.me.uk/index.php வேலை செய்யவில்லையே ! என்ன செய்யலாம்?

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

ARP/RARP full simulation program

server.c #include "stdio.h" #include "stdlib.h" #include "string.h" #include "sys/types.h" #include "sys/socket.h" #include "arpa/inet.h" #include "netinet/in.h" #define SA struct sockaddr struct IPmac { char ip[100]; char mac[100]; }; int main() { int sockfd,len,i; struct sockaddr_in servaddr; char buff[30],temp[30],ip[30],mac[30];

Configure opendns in ubuntu 12.04

Today i have changed my dns server name to opendns. which is alternative to default dns and it provide more secure, faster browsing experience. What is opendns? OpenDNS is the leading provider of Internet security and DNS services Industry leading malware and botnet protection Award winning Web filtering Faster, reliable, more secure DNS Ultra-reliable, globally distributed cloud network Simple, Smart, Easy How to configure opendns in ubuntu 12.04: open terminal and type sudo nano /etc/resolv.conf enter your password and change these lines   nameserver 208.67.222.222  nameserver 208.67.220.220 to use google public dns use 8.8.8.8, 8.8.4.4 instead of 208.67.222.222, 208.67.220.220 simple isn't..! now see your facebook load faster than before. opendns comes with parental control, so never worry about unwanted websites, and your childrens are safe now. to check your dns changed successfully goto welcome.opendns.com

Given a string, reverse only vowels in it; leaving rest of the string as it is

/* Given a string, reverse only vowels in it; leaving rest of the string as it is. Input : abcdef Output : ebcdaf */ import java.io.*; import java.util.*; public class VowelReverse { public static void main(String[] args) { Scanner sc = new Scanner(System.in); String str = sc.next(); String vowels = ""; String ans = ""; int arr[] = new int[str.length()]; for(int i=0;i<str.length();i++) { if(str.charAt(i)=='a' || str.charAt(i)=='e' || str.charAt(i)=='i' || str.charAt(i)=='o' || str.charAt(i)=='u') { vowels+=str.charAt(i); arr[i]=1; } } String revVowels = new StringBuffer(vowels).reverse().toString(); int j=0; for(int i=0;i<str.length();i++) { if(arr[i]!=1) { ans+=str.charAt(i); } else { ans+=revVowels.charAt(j); j++; } } System.out.println(ans); } }