Skip to main content

Posts

Showing posts from October, 2011

ஆப்லைனில் உபுண்டு உபயோகிப்பவர்களுக்கு மிகவும் பயனுள்ள ஒன்று

ஒரு சில காரணங்களால் உபுண்டுவில் இணைய இணைப்பினை ஏற்படுத்த இயலாமல் இருப்போம். எனவே சில மென்பொருட்களை நிறுவுவது மிகவும் சிரமமாக இருக்கும். சில *.deb களை இணையம் உள்ள கணினியில் இருந்த்து தரவிறக்கி நிறுவினாலும் சில பிரச்சனைகள் ஏற்படும். எனவே இணையம் இல்லாத உபுண்டு பயனாளர்களுக்கு இது மிகவும் பயன்படும். இது நான் ரொம்ப  நாளாக தேடிக்கொண்டிருந்த ஒன்று. இன்று தான் எனக்கு அகப்பட்டது. உங்களுக்கு தேவையானதெல்லாம் இவை தான்.

தமிழா சொல்திருத்தி - நெருப்பு-நரி ஆட்ஆன்

இச்சொல்திருத்தி, பலரது தொண்டூழிய உழைப்பின் வெளிப்பாடு ஆகும். இது தன் பயணத்தை 2004 ஆம் ஆண்டு தொடங்கியது. வே. இளஞ்செழியன், இராதாகிருஷ்ணன், சு. முகுந்தராஜ், விஜெய் ஆகியோர் இத்திட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், 2009 ஆம் ஆண்டு, அண்ணா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாலதி செல்வராஜ், சுஜி, ஶ்ரீ ராமதாஸ் ஆகியோர் விடுபட்டு போன திட்டத்திற்குப் புத்துயிர் கொடுத்தனர். 2010 இல், முனை. கேவின் ஸ்கேனல் குருபடான் 2.0 என்ற தனது வலை-தவழ் பொறியைக் கொண்டு 50 இலட்சம் தமிழ் சொற்தொகுதியை உருவாக்கினார். இச்சொல்திருத்தி, அத்தொகுதியின் அடிப்படையில் அமைந்திருக்கிறது. அவரைத் தவிர்த்து, ஹன்ஸ்பெல்லைத் தயாரித்த லாசி நெமெத்தும் அறிவுரைகளை வழங்கினார். முனை. ந. தெய்வசுந்தரம் அவர்களும் மொழி ஆய்வு பற்றிய அரிய கருத்துகளைத் தந்து உதவினார். -  தமிழா! குழுவினர். https://addons.mozilla.org/en-US/firefox/addon/thamizha-solthiruthi/ மிகவும் உபயோகமான ஒன்று. பயன்படுத்திப் பாருங்கள்.